ஜே.ஆர். அமைச்சரவை போன்று பலமான அணி சஜித்திடம்: திருடர்களா நல்லாவர்களா வேண்டும்?

ஜே.ஆர். அமைச்சரவை போன்று பலமான அணி சஜித்திடம்: திருடர்களா நல்லாவர்களா வேண்டும்?

ஜனாதிபதித் தேர்தல் எதிர்வரும் செப்டம்பர் மாதம் 21ஆம் திகதி நடைபெற உள்ள நிலையில் போட்டியிடும் பிரதான மற்றும் ஏனைய வேட்பாளர்கள் தமது கட்டுப்பணத்தை செலுத்தி வருகின்றனர்.

பிரதான வேட்பாளர்களாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச மற்றும் தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க ஆகியோர் கருதப்படுகின்றனர்.

இவர்களில் சுயாதீன வேட்பாளராக போட்டியிட ரணில் விக்ரமசிங்கவும், ஐக்கிய மக்கள் சக்தியின் கூட்டணியின் சார்பில் போட்டியிட சஜித் பிரேமதாசவும் கட்டுப்பணத்தை செலுத்தியுள்ளனர்.

மற்றுமொரு பிரதான வேட்பாளரான அனுரகுமார திஸாநாயக்க இன்னமும் தமது கட்டுப்பணத்தை செலுத்தவில்லை. இதேவேளை, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் சார்பில் போட்டியிட உள்ளதாக கூறியுள்ள முன்னாள் அமைச்சர் விஜேதாச ராஜபக்சவும் கட்டுப்பணத்தை செலுத்தியுள்ளனர்.

நேற்றைய தினம் கட்டுப்பணத்தை செலுத்திய சஜித் அணியின் முக்கிய உறுப்பினர்களின் ஒருவரான சுஜீவ சேனசிங்க கருத்து வெளியிடுகையில்,

நாட்டு மக்களுக்கு இரண்டு தெரிவுகள்தான் தற்போது உள்ளன. ஒன்று திருடங்களையும் கொமிஸ்காரர்களையும் மீண்டும் ஆட்சிக்கு கொண்டுவருவதா அல்லது இரண்டாவது தெரிவாக நல்லவர்களை ஆட்சிக்கு கொண்டுவருவதா என்பதுதான்.

அனைத்து நாட்டையும் ஒன்றிணைக்கும் கூட்டணியொன்றையே நாம் அமைத்துள்ளோம். நாம் உருவாக்கும் ஜனாதிபதி சிறந்த அனுபவம் மிக்கவராகவும் மக்களின் துன்பங்களை அறிந்தவராகவும் இருப்பார்.

1977ஆம் ஆண்டு அமைக்கப்பட்ட முன்னாள் ஜனாதிபதி ஜே.ஆர்.ஜெயவர்தனவின் அமைச்சரவையில் இருந்த ஏ.சி.எஸ்.அமீட், செல்டன் ஜெயசிங்ககே, காமினி ஜயசூரிய, லலித் அத்துலத்முதலி போன்று சிறந்த ஆளுமைமிக்க தலைவர்கள் எம்முடன் இருக்கின்றனர். எனவே, மக்கள் இவர்களுக்கான வாய்ப்பை வழங்க வேண்டும்.” என்றார்.

CATEGORIES
Share This