மொட்டு கட்சிக்குள் தொடரும் இழுபறி!
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் அறிவிப்பு பிற்போடப்பட்டுள்ளது.
பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் அடுத்த வாரம் அறிவிக்கப்படுவார் என அக்கட்சியின் சிரேஷ்ட பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் மொட்டு சின்னத்தில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளரை நியமிக்க கட்சியின் அரசியல் குழு கடந்த திங்கட்கிழமை தீர்மானித்தது.
இரண்டு நாட்களில் வேட்பாளர் அறிவிக்கப்படும் என அதன்போது அறிவிக்கப்பட்டது.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் அரசியல் குழுவின் அந்த தீர்மானத்தை அடுத்து, ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கு ஆதரவளிக்கவுள்ளதாக அக்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழுவொன்று அறிவித்துள்ளது.
இதன்படி, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பில் அடுத்தவாரம் கலந்துரையாடல் இடம்பெறவுள்ளதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, கட்சியின் அரசியல் குழு தீர்மானத்திற்கு மாறாக செயற்படும் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தீர்மானித்துள்ளது.
குறித்த பாராளுமன்ற உறுப்பினர்களின் ஆசன அமைப்பாளர் பதவிகளை நீக்குவது தொடர்பில் அவதானம் செலுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.