எதிர்க்கட்சித் தலைவர்களுக்கு ஜனாதிபதி அழைப்பு!

எதிர்க்கட்சித் தலைவர்களுக்கு ஜனாதிபதி அழைப்பு!

இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள சர்வதேச நாணய நிதியத்தின் பிரிதிநிதிகளுடன் கலந்துரையாடுவதற்காக நாடாளுமன்றத்தில் ஏற்றுக்கொள்ளப்பட்ட எதிர்க்கட்சித் தலைவர்களுக்கு ஜனாதிபதியினால் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இதற்காக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் எதிர்வரும் திங்கட்கிழமை ஜனாதிபதி அலுவலகத்தில் சந்திப்பு ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இதன்போது, சர்வதேச நாணய நிதியத்தின் முன்மொழிவுகள் குறித்து அதன் உயர்மட்டக் குழுவுடன் கலந்துரையாடுவதற்கு நாடாளுமன்றத்தில் ஏற்றுக்கொள்ளப்பட்ட எதிர்க்கட்சித் தலைவர்களுக்கு வாய்ப்பு வழங்கப்படும் என ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

CATEGORIES
TAGS
Share This