பொது வேட்பாளர் தொடர்பில் தமிழரசுக்கட்சி – தமிழர் விடுதலைக் கூட்டணி திடீர் சந்திப்பு
இலங்கைத் தமிழரசுக் கட்சியின் முக்கியஸ்தர்களுக்கும் தமிழர் விடுதலைக்கூட்டணிக்கும் இடையிலான சந்திப்பொன்று நேற்று மட்டக்களப்பில் சந்தித்து கலந்துரையாடியுள்ளனர்.
நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் தலைமையில் சில தமிழரசுக் கட்சி முக்கியஸ்தர்களும் அருண் தம்பிமுத்து தலைமையிலான தமிழர் விடுதலைக்கூட்டணி முக்கியஸ்தர்களும் சந்திப்பில் கலந்து கொண்டனர்.
மூத்த போராளி யோகன் பாதரின் இல்லத்தில் நடைபெற்ற இக் கலந்துரையாடலில் மூத்த போராளி காக்கா அண்ணனும் கலந்து கொண்டு ஜனாதிபதித் தேர்தலில் தமிழ்ப் பொது வேட்பாளருக்கான ஆதரவுத் தளத்தை விரிவுபடுத்துவதன் தேவையையும் சங்கு சின்னத்திற்கு வாக்களிக்கும் தேவையையும் வலியறுத்தியதுடன், தனது கருத்துக்களைத் தெரிவித்து ஆலோசனைகளையும் வழங்கியிருந்தார்.
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான ஶ்ரீநேசன், கோடீஸ்வரன் ஆகியோரும் இந்த சந்திப்பில் கலந்து கொண்டனர்.
தமிழ்ப் பொதுவேட்பாளர் தொடர்பாக கலந்துரையாடலில் கலந்து கொண்ட அனைவரும் ஒரே நிலைப்பாட்டில் உறுதியான கருத்துக்களைத் தெரிவித்ததால் கலந்துரையாடல் ஆக்கபூர்வமாக இருந்ததாக தெரித்தனர்.
இது போன்ற கலந்துரையாடல்கள் தொடர்ச்சியாக இடம்பெற்று தமிழ்ப் பொதுவேட்பாளருக்கான ஆதரவை அதிகரிக்கவும் இணக்கம் காணப்பட்டதாக கலந்துரையாடல் ஏற்பாட்டாளர் தெரிவித்தார்.