இலங்கையில் இனப்படுகொலை இடம்பெற்றது என்ற ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை கனடா மீண்டும் சுமத்தக்கூடாது

இலங்கையில் இனப்படுகொலை இடம்பெற்றது என்ற ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை கனடா மீண்டும் சுமத்தக்கூடாது

இலங்கையில் இனப்படுகொலை இடம்பெற்றது என்ற ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை கனடா மீண்டும் சுமத்தக்கூடாது என இலங்கை வேண்டுகோள் விடுத்துள்ளது.

கனடாவின் சர்வதேச அபிவிருத்திக்கான பிரதி அமைச்சர் கிறிஸ்டபர்மக்லெனனை சந்தித்தவேளை இலங்கையின் வெளிவிவகார செயலாளர் அருணிவிஜயவர்த்தன இந்த வேண்டுகோளை விடுத்துள்ளார்.

இலங்கை வருவாய்ஈட்டல் வளர்ச்சியை நோக்கிய பயணத்தை மேற்கொண்டுள்ள சந்தர்ப்பத்தில் பொருளாதார ஸ்திரதன்மையை ஏற்படுத்துவதில் இலங்கை அடைந்துள்ள குறிப்பிடத்தக்க முன்னேற்றம் இலங்கை பொருhளதார இராஜதந்திரத்திற்கு கொடுத்துள்ள முன்னேற்றம் ஆகியவை குறித்து வெளிவிவகார செயலாளர் எடுத்துரைத்துள்ளார்.

நல்லிணக்கத்தை அமைதியை ஏற்படுத்தும் முயற்சிகளிற்கு சமாந்திரமாக இது இடம்பெறுகின்றது என அவர் தெரிவித்துள்ளார்.

இலங்கையில் இடம்பெற்றமோதல்கள் தொடர்பில் இனப்படுகொலை தொடர்பான தவறான கதைகளை வெளியிடும் விதத்தில் கனடாவில் அண்மைய ஆண்டுகளில் உயர்மட்டத்தில் வெளியிடப்பட்டுள்ள அறிவிப்புகள் தொடர்பில் இலங்கையின் ஆழ்ந்த கவலையை வெளிவிவகார செயலாளர் தெரிவித்துள்ளார்.

கனடா இலங்கையுடன் ஆக்கபூர்வமான விதத்தில் ஈடுபாட்டை வெளிப்படுத்தவேண்டும் என தெரிவித்துள்ள வெளிவிவகார அமைச்சின் செயலாளர் பேச்சுவார்த்தை நல்லிணக்கத்திற்கான முயற்சிகளிற்கு உதவுமாறு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

CATEGORIES
Share This