Category: செய்திகள்

திருமலை குச்சவெளி இலந்தைக்குளத்தில் இரவோடு இரவாக புத்த விகாரையா?
செய்திகள், பிரதான செய்தி

திருமலை குச்சவெளி இலந்தைக்குளத்தில் இரவோடு இரவாக புத்த விகாரையா?

Uthayam Editor 02- July 27, 2024

திருகோணமலை குச்சவெளி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட இலந்தைக்குளம் பகுதியில் இரவோடு இரவாக புத்த விகாரை அமைப்பதற்காக காணி துப்பரவு செய்யப்பட்டதால் அப்பகுதியில் பதற்றம் நிலவி வருகின்றது. குச்சவெளி - இலந்தைக்குளம் 5ஆம் கட்டைப்பகுதியில் வியாழக்கிழமை (25) இரவில் இருந்து பௌத்த பிக்கு ஒருவரின் தலைமையில் புத்த விகாரை அமைப்பதற்காக மக்களுடைய காணி துப்பரவு செய்யப்பட்டு வருவதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர். வயலுக்கு சென்ற மக்கள், இந்த ஆக்கிரமிப்பு நடவடிக்கையை அவதானித்து மக்களுக்கு தகவல் வழங்கியதையடுத்து வெள்ளிக்கிழமை (26) குச்சவெளி பிரதேச செயலாளரின் கவனத்திற்கு இந்த விடயம் கொண்டு வரப்பட்டுள்ளதாகவும் இதனைத் தொடர்ந்து இந்த நடவடிக்கை தற்காலிகமாக இடை நிறுத்தப்பட்டுள்ளதாகவும் மக்கள் தெரிவிக்கின்றனர். இலந்தைக்குளம் பகுதியில் காலாகாலமாக வாழ்ந்து வந்த மக்கள் யுத்தத்தின் காரணமாக 1990ஆம் ஆண்டு மற்றும் அதனை அண்டிய காலப் பகுதிகளில் இடம்பெயர்ந்திருந்ததாகவும், அப்பகுதியில் மீள குடியமர்வதற்கான கோரிக்கையை சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் நீண்டகாலமாக முன்வைத்துவருவதாகவும் இந்நிலையில் தற்போது அப்பகுதி ஆக்கிரமிக்கப்படுவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதாகவும் மக்கள் கவலை தெரிவிக்கின்றனர். இந்தப் பகுதியில் மக்கள் வாழ்ந்ததற்கான பிறப்பு அத்தாட்சி பத்திரம், இறப்பு அத்தாட்சிப் பத்திரம், காணி ஆவணங்கள் உட்பட உடைந்த பாடசாலைக் கட்டடம் மற்றும் அரச கட்டடங்களும் இன்னும் ஆதாரங்களாக காணப்படுவதாகவும், வயல் வரம்புகளும் இன்னும் அழியாமல் காணப்படுவதாகவும் மக்கள் தெரிவிக்கின்றனர். மண்வெட்டிக்காக பிடிக்கம்பு வெட்டினாலே கைது செய்து சட்ட நடவடிக்கை எடுக்கும் அரச திணைக்களங்கள் பாரிய இயந்திரங்களினாலும், இயந்திர கை வாள்களினாலும் பாரிய பெரிய மரங்களை வெட்டி அழிப்பதற்கு எதிராக ஏன் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை எனவும் மக்கள் கேள்வி எழுப்புகின்றனர். Read More

தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை: நாடாளுமன்றத்தில் கோரிக்கை
செய்திகள், பிரதான செய்தி

தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை: நாடாளுமன்றத்தில் கோரிக்கை

Uthayam Editor 02- July 27, 2024

உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் கடுமையாக விமர்சிக்கப்படும் பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு நீண்டகாலமாக சிறையில் உள்ள தமிழர்களை விடுதலை செய்ய வேண்டுமென வடக்கிலுள்ள தமிழ் மக்களின் பிரதிநிதி ஒருவர் நாடாளுமன்றத்தில் கோரிக்கை விடுத்துள்ளார். ... Read More

ஜனாதிபதித் தேர்தலுக்கான வேட்பாளர் பட்டியல்: 12 ஆக அதிகரிப்பு
செய்திகள்

ஜனாதிபதித் தேர்தலுக்கான வேட்பாளர் பட்டியல்: 12 ஆக அதிகரிப்பு

Uthayam Editor 02- July 27, 2024

ஜனாதிபதி தேர்தலில் தோற்றவுள்ள வேட்பாளர்களின் எண்ணிக்கை 12 ஆக அதிகரித்துள்ளது. ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, எதிர்க்கட்சித் தலைவரும் ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவருமான சஜித் பிரேமதாச, தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க ... Read More

ஜனாதிபதித் தேர்தல்: நாடு முழுவதும் பாதுகாப்பு – வழங்கப்பட்ட அவசர உத்தரவு
செய்திகள்

ஜனாதிபதித் தேர்தல்: நாடு முழுவதும் பாதுகாப்பு – வழங்கப்பட்ட அவசர உத்தரவு

Uthayam Editor 02- July 27, 2024

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தல் குறித்து தேர்தல்கள் ஆணைக்குழு அறிவிப்பை வெளியிட்டிருக்கும் நிலையில் இந்தக் காலப் பகுதியில் ஜனாதிபதி வேட்பாளர்கள், பொது மக்கள் மற்றும் முழு நாட்டினதும் பாதுகாப்பை உறுதிப்படுத்தத் தேவையான சகல நடவடிக்கைகளையும் எடுக்குமாறு ... Read More

மகிந்தவின் வலது கையாக செயல்பட்டவர் – பல தசாப்த நட்பு: சஜித்துடன் சங்கமம்
செய்திகள்

மகிந்தவின் வலது கையாக செயல்பட்டவர் – பல தசாப்த நட்பு: சஜித்துடன் சங்கமம்

Uthayam Editor 02- July 26, 2024

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைவரும் முன்னாள் ஜனாதிபதியுமான மஹிந்த ராஜபக்ச ஜனாதிபதியாக இருந்த காலப்பகுதியில் அவரது நாடாளுமன்ற விவகாரச் செயலாளராக கடமையாற்றிய குமாரசிறி ஹெட்டிகே எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவு வழங்கியுள்ளார். சஜித் ... Read More

”மக்களின் மனங்களை வெல்வதில் அரசியல்வாதிகள் தோற்றுவிட்டனர்”
செய்திகள்

”மக்களின் மனங்களை வெல்வதில் அரசியல்வாதிகள் தோற்றுவிட்டனர்”

Uthayam Editor 02- July 26, 2024

காணி உறுதிகளை வழங்கி, அரிசி விநியோகம் செய்து மக்களை ஏமாற்றலாம் என நினைத்தால் அரசியல்வாதிகளின் முட்டாள்தனமான செயல் என தேசிய நாமல் உயன அமைப்பின் ஸ்தாபகர் வனவாசி ராகுல தேரர் தெரிவித்துள்ளார். தேசிய நாமல் ... Read More

அனுரவின் சுயேட்சையான தேர்தல் கண்காணிப்பு மையம்: இன்று திறந்து வைப்பு
செய்திகள்

அனுரவின் சுயேட்சையான தேர்தல் கண்காணிப்பு மையம்: இன்று திறந்து வைப்பு

Uthayam Editor 02- July 26, 2024

ஜேவிபி தலைமையில் தேசிய மக்கள் சக்தி இன்று (26) தனது சுயேட்சையான தேர்தல் கண்காணிப்பு மையத்தை திறக்கவுள்ளது. தேசிய மக்கள் சக்தியின் தேர்தல் கண்காணிப்பு மையமாக இது இன்று (26) ஆரம்பிக்கப்படவுள்ளது. இதற்கு முன்னர் ... Read More