தேர்தல் பிரசாரத்தில் கவனம் பெற்ற ரிஷி சுனக்கின் ‘முதுகு பை’
பிரசாரத்திற்காக நாட்டின் ஏழ்மையான பகுதிக்கு சென்ற போது விலை உயர்ந்த பையுடன் ரிஷிசுனக் சென்றது சமூக வலைதளங்களில் விவாதத்தை ஏற்படுத்தி உள்ளது.
இங்கிலாந்தில் பொது தேர்தல் ஜூலை 4- ஆம் திகதி நடைபெற உள்ளது. இதையொட்டி பிரதமர் ரிஷிசுனக் தனது கட்சிக்கு ஆதரவு திரட்டி நாடு முழுவதும் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார். அதன் ஒரு பகுதியாக ரிஷிசுனக் சமீபத்தில் லண்டனில் இருந்து கார்ன்வால் வரை செல்லும் ஸ்லீப்பர் ரெயிலில் பயணம் செய்தார்.
அப்போது ரிஷிசுனக் அணிந்திருந்த ‘முதுகு பை’அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. ஆர்.எஸ். என எழுதப்பட்டிருந்த அந்த ‘முதுகு பை’யுடன் அவர் ரயிலில் ஏறிய காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலான நிலையில், அந்த ‘முதுகு பை’ தொடர்பான விபரங்களை அறிய மக்கள் ஆர்வம் காட்டி உள்ளனர். அந்த ‘முதுகு பை’ டுமி அரைவ் பிராட்லி நிறுவனத்தின் பேக் என்று கருதப்படுகிறது.
இவை மிகப்பெரிய கடைகளில் விற்கப்படுகிறது. இந்த பையின் விலை இலங்கை நாணய மதிப்பில் கிட்டத்தட்ட 4 இலட்சம் ரூபாய்கள் என கூறப்படுகிறது. இந்த பை தொடர்பான விபரங்கள் வைரலாகி வரும் நிலையில், பிரசாரத்திற்காக நாட்டின் ஏழ்மையான பகுதிக்கு சென்ற போது விலை உயர்ந்த பையுடன் ரிஷிசுனக் சென்றது சமூக வலைதளங்களில் விவாதத்தை ஏற்படுத்தி உள்ளது.