தேர்தல் செலவு ஒழுங்குமுறைச் சட்டம் பயன்படுத்தப்படும்: தேர்தல் திகதி மாத இறுதிக்குள் அறிவிப்பு

தேர்தல் செலவு ஒழுங்குமுறைச் சட்டம் பயன்படுத்தப்படும்: தேர்தல் திகதி மாத இறுதிக்குள் அறிவிப்பு

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் தேர்தல் செலவு ஒழுங்குமுறைச் சட்டம் பயன்படுத்தப்படும் என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

தேர்தல் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.

சர்வஜன வாக்கெடுப்பு தவிர நடைபெறும் அனைத்து தேர்தலிலும் இந்த சட்டம் பயன்படுத்தப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.

தேர்தல் செலவுகளை ஒழுங்குபடுத்தும் சட்டத்தை அமுல்படுத்துவது தொடர்பில் கட்சியின் செயலாளர்கள் மற்றும் அரச அதிகாரிகளுக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் சமன் ஸ்ரீ ரத்நாயக்க கூறியுள்ளார்.

இதேவேளை,ஜனாதிபதி தேர்தலுக்கான தேர்தல் திகதி அடுத்த வாரம் அறிவிக்கப்படும் என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இதன்போது, வேட்புமனுக்கள் கோரலுக்கான திகதிகளுக்கான அறிவிப்பும் இதன்போது வெளியாகும் என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல். ரத்நாயக்க தெரிவித்தார்.

ஜனாதிபதித் தேர்தலுக்கான அறிவிப்பை வெளியிடும் அதிகாரம் நேற்றுமுன்தினம் முதல் ஆணைக்குழுக்வுக்கு அதிகாரம் கிடைத்திருந்தாலும் இம்மாத இறுதிக்குள் உரிய திகதியை அறிவிப்பதாக ஆணைக்குழுவின் தலைவர் தெரிவித்திருந்தார் என்பதும் சுட்டிக்காட்டத்தக்கது.

CATEGORIES
Share This