மார்ச் 15ஆம் திகதி தமிழகம் வருகிறார் பிரதமர் மோடி!

மார்ச் 15ஆம் திகதி தமிழகம் வருகிறார் பிரதமர் மோடி!

ஏப்ரல் அல்லது மே மாதத்தில் மக்களவைத் தேர்தல் நடைபெறவிருக்கும் நிலையில், மார்ச் 15ஆம் திகதி மீண்டும் தமிழகம் வருகிறார் பிரதமர் நரேந்திர மோடி.

மார்ச் 4ஆம் திகதி, சென்னை வந்திருந்த பிரதமர் மோடி, பாஜக பொதுக் கூட்டத்திலும் கலந்து கொண்டு உரையாற்றினார்.

இந்த நிலையில், மீண்டும் மார்ச் 15ஆம் திகதி மூன்று நாள்கள் பயணமாக பிரதமர் நரேந்திர மோடி தமிழகம் வருகிறார் என்ற தகவல் உறுதி செய்யப்பட்டுள்ளது.

மார்ச் 15ஆம் திகதி சேலம் வரும் பிரதமர் நரேந்திர மோடி, மார்ச் 16ஆம் திகதி கன்னியாகுமரி செல்கிறார். பிறகு, 18ஆம் திகதி கோவை செல்லவிருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மக்களவைத் தேர்தல் நெருங்கும் நேரத்தில், பிரதமர் நரேந்திர மோடியின் தமிழக வருகை முக்கியத்துவம் பெறுகிறது.

பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி கடந்த 4ஆம் திகதிதான் சென்னை வந்தார். பின்னர், கல்பாக்கம் அணு உலை ரியாக்டர் மேம்பாடு திட்டத்தை அவர் பார்வையிட்டார். அதைத்தொடர்ந்து நந்தனம் ஒய்எம்சிஏ திடலில் நடைபெற்ற பாஜக பொதுக்கூட்டத்திலும் பிரதமர் மோடி பங்கேற்றார்.

கடந்த ஒரு சில வாரங்களில் மூன்றாவது முறையாக பிரதமர் மோடி மார்ச் 15 ஆம் திகதி தமிழகம் வருகை தரவிருப்பது குறிப்பிடத்தக்கது.

CATEGORIES
TAGS
Share This