மணிப்பூரில் மீண்டும் துப்பாக்கி சூடு – இருவர் பலி

மணிப்பூரில் மீண்டும் துப்பாக்கி சூடு – இருவர் பலி

மணிப்பூரில் மீண்டும் தாக்குதல் சம்பவம் அரங்கேறியது. இன்றைய தாக்குதலில் சிக்கி இரண்டு பேர் உயிரிழந்த நிலையில், ஐந்து பேர் காயமுற்றதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இம்பால் மேற்கு மாவட்டத்தில் உள்ள கௌட்ருக் என்ற கிராமத்தில் திடீர் துப்பக்கி சூடு நடத்தப்பட்டு இருக்கிறது.

துப்பாக்கி சூட்டில் உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ள நிலையில், உயிரிழந்தோர் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது. மேலும் கிராமத்தை சேர்ந்த ஒருவர் காணாமல் போனதாகவும் காவல் துறையினர் சார்பில் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. 

CATEGORIES
TAGS
Share This