நீர்கொழும்பு தேவாலயத்துக்கு முன்பாக ஆர்ப்பாட்டம்!

நீர்கொழும்பு தேவாலயத்துக்கு முன்பாக ஆர்ப்பாட்டம்!

நீர்கொழும்பு – பிட்டிபன தேவாலயத்துக்கு முன்பாக அருட்தந்தையர்கள் மற்றும் பொதுமக்கள் இணைந்து நேற்றைய தினம் ஆர்பாட்டமொன்றில் ஈடுபட்டனர்.

பிடிபன பகுதியிலுள்ள மீன் ஏல விற்பனை நிலைய நிர்வாகப் பிரச்சினையை முன்னிறுத்தி, கொழும்பு பேராயரின் உத்தியோகபூர்வ இல்லத்திற்கு முன்பாக மீனவர்கள் குழுவொன்று மேற்கொண்டுள்ள ஆர்ப்பாட்டத்துக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் இந்த எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

65 வருடங்கள் பழமையான நீர்கொழும்பு – பிடிபன மீன் ஏல விற்பனை நிலைய நிர்வாகத்தை கர்தினாலின் கீழ் கொண்டுவராமல் தங்களிடம் ஒப்படைக்குமாறு கோரி மீனவர்கள் பல தடவைகள் போராட்டங்களில் ஈடுபட்டுள்ளனர்.

கடந்த 19ஆம் திகதி நீர்கொழும்பு – பிடிபன மீன் ஏல விற்பனை நிலைய பகுதியைச் சேர்ந்த மீனவர்கள் குழுவொன்று கொழும்பு பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித்தின் உத்தியோகபூர்வ இல்லத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

அத்துடன், செய்தியாளர் சந்திப்பொன்றையும் நடத்தி அவர்கள் தமது எதிர்ப்பையும் வெளிப்படுத்தினர்.

CATEGORIES
TAGS
Share This