இளைஞரின் உயிரை காப்பாற்றிய பிரியாணி!

இளைஞரின் உயிரை காப்பாற்றிய பிரியாணி!

மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவை சேர்ந்த இளைஞர் ஒருவர் வறுமையில் வாடிய நிலையில், பாலத்தின் மீது ஏறி கீழே குறித்து தற்கொலை செய்து கொள்வதாக மிரட்டல் விடுத்துள்ளார். இந்த சம்பவம் காரணமாக அந்த பகுதியில் பரபரப்பான சூழல் ஏற்பட்ட நிலையில் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் அந்த இளைஞரிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது அந்த இளைஞர் கணக்கு வேலை இல்லை என்றும் தனது குடும்பம் வறுமையால் தவித்து வருவதாக கூறியுள்ளார்.

இதனையடுத்து போலீசார் அந்த இளைஞருக்கு வேலை வாங்கி தருவதாக உறுதி அளித்தும் அந்த இளைஞர் நம்பவில்லை. மேலும் உடனே உங்களுக்கு சாப்பிட பிரியாணி வாங்கி தருவதாக போலீசார் கூறிய நிலையில் அந்த இளைஞருக்கு பிரியாணி மீது ஆசை ஏற்பட்டு உடனடியாக கீழே இறங்கியுள்ளார்.

இதனையடுத்து அந்த இளைஞருக்கு பிரியாணி வழங்கப்பட்டு அவர் மீது எந்த வழக்கும் பதிவு செய்யாமல் மனநல பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். பிரியாணியால் இளைஞர் உயிர் பிழைத்த சம்பவம் பகுதியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

CATEGORIES
TAGS
Share This