உரிமையாளர் குடும்பத்தை காப்பாற்றி உயிரை விட்ட கர்ப்பிணி நாய்!

உரிமையாளர் குடும்பத்தை காப்பாற்றி உயிரை விட்ட கர்ப்பிணி நாய்!

தாய்லாந்து நாட்டில் உள்ள பாக்தானி பகுதியைச் சார்ந்தவர் தனது வீட்டில் செல்லமாக பெண் நாய் ஒன்றை வளர்த்து வந்தார். இந்த நாய் கர்ப்பிணியாக இருந்த நிலையில், ஒரு சில வாரங்களில் குட்டிகளை ஈன்றெடுக்க தயாராக இருந்தது.

இவரது வீட்டிற்கு விஷத்தன்மை கொண்ட பாம்பு ஒன்று வந்துவிட, அதனை கண்ட நாய் பாம்பை விரட்டி இருக்கிறது. பாம்பும் பதிலுக்கு பதில் சண்டையிட்டதை தொடர்ந்து, நாய் பாம்பை கடித்துக்குதறி கொன்றது.

பாம்பு தீண்டியதில் கர்ப்பிணி நாயின் மீது விஷம் பரவி அது நிகழ்விடத்திலேயே மயங்கி விழுந்து உயிரிழந்தது. இதனால் குடும்பத்தினர் பெரும் சோகத்திற்குள்ளாகினர். இந்த சம்பவம் கடந்த 2020-ல் நடைபெற்ற நிலையில் மீண்டும் வைரலாகி வருகிறது.

CATEGORIES
TAGS
Share This