ஆசியாவிலேயே புற்றுநோயால் அதிக மரணத்தை சந்திக்கும் நாடு இந்தியா!

ஆசியாவிலேயே புற்றுநோயால் அதிக மரணத்தை சந்திக்கும் நாடு இந்தியா!

ஆசியாவில் உள்ள சீனா, இந்தியா, ஜப்பான் ஆகிய முதன்மை நாடுகள் புற்றுநோயால் ஏற்படும் மரணங்களின் எண்ணிக்கை விகிதத்தில், முதல் மூன்று இடங்களை கொண்டுள்ளது The Lancet Regional Health – Southeast Asia இதழில் வெளியிடப்பட்ட தகவலின் வாயிலாக உறுதி செய்யப்பட்டுள்ளது.

கடந்த 1990 முதல் 2019 வரை கிடைக்கப்பெற்ற தரவுகளின் அடிப்படையில், 49 ஆசிய நாடுகளில் நடைபெற்ற சோதனையில், 29 நாடுகளில் புற்றுநோயின் காரணமாக அதிக இறப்புகள் உறுதி செய்யப்பட்டுள்ளன.

கடந்த 2019ம் ஆண்டில் மட்டும் இந்தியாவில் 12 இலட்சம் புற்றுநோய் தொற்றுகள் புதிதாக உறுதி செய்யப்பட்டு, 9.3 இலட்சம் இறப்புகளை ஏற்படுத்தி இருக்கின்றன.

சீனாவில் 48 இலட்சம் புற்றுநோயாளிகள் மற்றும் 27 இலட்சம் இறப்புகள் என முதல் இடத்தில இருக்கிறது. ஜப்பானை பொறுத்தமட்டில் 9 இலட்சம் புதிய புற்றுநோயாளிகள் மற்றும் 4.4 இலட்சம் இறப்புகளை பெற்றுள்ளது.

ஆசியாவில் இருக்கும் 49 நாடுகளில் சீனா மற்றும் இந்தியா மக்கள் தொகை எண்ணிக்கை அதிகம் கொண்டவை ஆகும். மூச்சுக்குழாய், நுரையீரல், மார்பகம், பெருங்குடல், மலக்குடல், தோல், கல்லீரல், கணையம் உட்பட பல்வேறு புற்றுநோய் காரணமாக மக்கள் பாதிக்கப்பட்டு இருக்கின்றனர்.

புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்கள் பெரும்பாலும் புகை, மது, பான் மசாலா, குட்கா, சுற்றுப்புற சூழல் காரணிகளால் புற்றுநோயை எதிர்கொண்டதும் தெரியவந்தது.

2019ல் ஏற்பட்ட புற்றுநோய் மரணங்களின் விகிதம் 32.9% ஆகும். இதில் உதடு & வாய்வழி புற்றுநோய் பாதிப்பு காரணமாக ஏற்பட்ட மரணங்கள் 28.1% ஆகும். இது இந்தியாவில் மட்டும் ஏற்பட்டுள்ளது.

இந்த தரவுகள் அனைத்தும் ஆசியாவில் புற்றுநோய் பொதுசுகாதார அச்சுறுத்தலாக மாறி இருப்பதை உறுதி செய்துள்ளது. அவை அவசர கொள்கை கவனத்தை உருவாக்க வழிவகை செய்வதாகவும் ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.

CATEGORIES
TAGS
Share This