இஸ்ரேலியர்களை இலக்குவைத்து தாக்குதல் நடத்த திட்டமா?: செய்திகள் கூறுவதென்ன?

இஸ்ரேலியர்களை இலக்குவைத்து தாக்குதல் நடத்த திட்டமா?: செய்திகள் கூறுவதென்ன?

இஸ்ரேலிய சுற்றுலாப் பயணிகளை இலக்குவைத்து இலங்கையில் தாக்குதலுக்கான வியூகங்களை வகுத்திருக்கலாம் என சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிடடுள்ளன.

இலங்கையில் மிகவும் பிரபல்யமான சுற்றுலாத் தளமாக உள்ள அறுகம்பேவை இலக்குவைத்து தாக்குதல் நடத்தப்படலாம் என்பதால் அங்கு அமெரிக்க பிரஜைகள் எவரையும் செல்ல வேண்டாம் என இலங்கையில் உள்ள அமெரிக்க தூதரகம் நேற்று புதன்கிழமை எச்சரிக்கை விடுத்திருந்தது.

இந்த எச்சரிக்கையால் இலங்கை மக்கள் குழப்பமடைந்துள்ளனர். மக்கள் குழப்பமடைய தோவையில்லையென பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் நிஹால் தல்துவ தெரிவித்தார்.

”அறுகம்பேவில் இஸ்ரேலியர்களால் உருவாக்கப்பட்டுள்ள கட்டிடமொன்று உள்ளது. அருகம்பே மற்றும் பொத்துவில் பிரதேசங்களில் சர்ஃபிங் செய்வதால் (Surfing season) இஸ்ரேலியர்கள் அதிகமாக அங்கு செல்கின்றனர்.

அவர்களுக்கு ஏதேனும் ஆபத்து ஏற்படலாம் என கடந்த சில நாட்களுக்கு முன்னர் தகவல் கிடைத்துள்ளன.“ என்றும் நேற்று பொலிஸ் தலைமையகத்தில் இடம்பெற்ற ஊடகச் சந்திப்பில் நிஹால் தல்துவ கூறினார்.

இந்நிலையில், அமெரிக்காவின் இந்த எச்சரிக்கை தொடர்பில் சர்வதேச ஊடகங்களும் சில செய்திகளை வெளியிட்டு வருகின்றன. அதில், ”இஸ்ரேலியர்களை இலக்குவைத்து உலகின் பல நாடுகளில் தாக்குதல் நடத்த திட்டமிடல்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. யூதர்களுக்கு எதிரான தரப்பினரால் இந்த திட்டமிடல்கள் மேற்கொள்ளப்படுகின்றன.

இலங்கையின் பாதுகாப்புப் பிரச்சினைகள் இன்னும் தீர்க்கப்படவில்லை என்பதை நினைவூட்டுவதாக இந்த அறிவிப்பு அமைந்துள்ளது. இஸ்ரேல், பலஸ்தீனம் மற்றும் லெபனானில் மோதல்கள் நடந்து வருகின்றன. மோதலில் இருந்து வெகு தொலைவில் உள்ள நாடுகளில் கூட, இஸ்ரேலிய சுற்றுலாப் பயணிகள் பதிலடி கொடுப்பதற்கான பிரதான இலக்குகள் மேற்கொள்ளப்படுகின்றன.

இலங்கையில் சமூக ஊடகச் செயற்பாடுகள் மற்றும் ஹீப்ரு மொழிப் பதிவுகள் மற்றும் கையொப்பங்கள் அதிகரிப்பது மற்றும் உயர்மட்ட வெளிநாட்டு உளவுத்துறை அதிகாரிகளின் வருகையும் இந்த அறிவிப்பின் பின்புலத்தில் இருக்கலாம்.” எனவும் சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

CATEGORIES
Share This