ரணிலின் முகத்தில் தோல்வி பயம்!

ரணிலின் முகத்தில் தோல்வி பயம்!

தேர்தலொன்றை சந்தித்தால் நிச்சயம் தோல்வி பெறுவார் என ஜனாதிபதி ரணில் விக்மசிங்கவுக்கு தெரியும். தோல்வி பயத்தை அவரது முகமே காட்டிக்கொடுப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபூர் ரஹ்மான் தெரிவித்தார்.

கொழும்பின் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை கூறினார்.

மேலும் கருத்து தெரிவித்த அவர்,

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் பக்கம் நிற்கும் சிலர் ஜனாதிபதி தேர்தலை ஒத்திவைக்கும் யோசனையை முன்வைத்துள்ளனர். ஐக்கிய தேசியக் கட்சியின் செயலாளர் மற்றும் தவிசாளர் உட்பட பலர் அந்த யோசனையை ஊக்குவிக்கின்றனர்.

இந்த கருத்து ஒரு பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியன் பின்னர் ரணில் விக்ரமசிங்க கூறுகின்றார், தேர்தல் நிச்சயம் நடைபெறும் என்று.

இவற்றிலிருந்து எங்களுக்கு தெளிவாக ஒன்று புரிகின்றது. ஜனாதிபதி மற்றும் ராஜபக்சர்கள் இணைந்து உருவாக்கியுள்ள இந்த அரசாங்கத்திற்கும் மக்களுக்கும் ஒரு முரண்பாடு காணப்படுகின்றது.

தேர்தலை ஒன்றை சந்தித்தால் ஏற்படும் தோல்வி பயத்தை அவரின் முகம் காட்டிக்கொடுக்கின்றது. இவற்றிலிருந்து எதிர்வரும் தேர்தலில் அவர்கள் நிச்சயம் தோல்வி பெறுவார்கள் என்பது தெளிவாகின்றது.

இந்த தோல்வியை அறிந்தே அவர்கள் தேர்தல் காலத்தை நீடிப்பதற்கான வழிமுறைகளை தேடுகின்றனர். அதற்காக தற்போது ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்.

ஜனாதிபதிக்காக அரசாங்கம் சமர்ப்பித்துள்ள மதிப்பீடுகள் ஜனாதிபதித் தேர்தல் நடவடிக்கைகளுக்காக செலவிடப்படுகிறதா என்பதை தேர்தல்கள் ஆணைக்குழு ஆராய வேண்டும்.

8,750 மில்லியன் ரூபா ஜனாதிபதி தேர்தலுக்கு ஒதுக்கப்பட்டுள்ள நிலையில் அதனை எந்தவொரு நிதியிலிருந்தும் பெற்றுக்கொள்ள முடியும்.

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலுக்காக இவ்வளவு நிதி ஒதுக்கப்பட வேண்டுமா என்றும் முஜிபூர் ரஹ்மான் கேள்வி எழுப்புகிறார்.

CATEGORIES
Share This