பொதுத் தேர்தலில் அனைத்து சக்திகளையும் ஒன்றிணைத்து பரந்த கூட்டணி; ரணில் தலைமை வகிப்பார்

பொதுத் தேர்தலில் அனைத்து சக்திகளையும் ஒன்றிணைத்து பரந்த கூட்டணி; ரணில் தலைமை வகிப்பார்

ஜனாதிபதித் தேர்தலில் ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவான அனைத்து சக்திகளையும் ஒன்றிணைத்து பரந்த கூட்டணியை உருவாக்கி பொதுத் தேர்தலில் வலுவான எதிர்க்கட்சியை கட்டியெழுப்புவதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்தார்.

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் தலைமையில் புதிய கூட்டணி உருவாக்கப்படும் எனவும் அவர் கூறினார்.

மேலும் கருத்து தெரிவித்த அவர்,

”ரணில் விக்கிரமசிங்க புதிய கூட்டணிக்கு தலைமை தாங்கினாலும், பொதுத் தேர்தலில் போட்டியிடப் போவதில்லை.

ஜனாதிபதி கோட்டாபயவின் செயல்களையே தற்போது ஜனாதிபதி அனுரகுமாரவும் செய்கின்றார், ஜனாதிபதி அலுவலகத்தில் இருந்த 993 வாகனங்களை வேறு நிறுவனங்களுக்கு விநியோகித்தார்.

ஜனாதிபதி அலுவலகத்தில் மதிய உணவு நேரத்தைக் குறைத்தார். மிகுந்த எதிர்பார்ப்புடன் அரசாங்கம் அமைக்கப்பட்ட போது, ​​அந்த அரசாங்கத்தை நடத்துவது மிகவும் கடினமாக இருந்தது” என்றார்.

CATEGORIES
Share This