உக்ரைன் வைத்தியசாலையில் மீது ரஷ்ய தாக்குதல்: பலர் உயிரிழப்பு

உக்ரைன் வைத்தியசாலையில் மீது ரஷ்ய தாக்குதல்: பலர் உயிரிழப்பு

வடகிழக்கு உக்ரைனில் உள்ள சுமியில் உள்ள வைத்தியசாலை மீது ரஷ்யா சனிக்கிழமை அதிகாலை தாக்குதல் நடத்தியதில் 10 பேர் கொல்லப்பட்டனர்.

அத்துடன், இந்த தாக்குதலில் குறைந்தது 22 பேர் காயமடைந்தனர் என்று உக்ரேனிய அதிகாரிகள் தெரிவித்தனர்.

உக்ரைனில் உள்ள ஐ.நா மனித உரிமைகள் கண்காணிப்புப் பணியகத்தின் தலைவர் டேனியல் பெல், 45 நிமிட இடைவெளியில் இரண்டு தாக்குதல்களில் செயிண்ட் பான்டெலிமோன் வைத்தியசாலையை தாக்கியதாக கூறினார்.

“இரண்டாவது தாக்குதலின் போது பெரும்பாலான இறப்புகள் நிகழ்ந்தன என்றும் அவர் கூறினார்.

சுமியின் பிராந்திய நிர்வாகம் சனிக்கிழமை பிற்பகுதியில் நடந்த தாக்குதலில் 10 பேர் கொல்லப்பட்டதுடன், 22 பேர் காயமடைந்தனர் என்று தெரிவித்துள்ளது.

மேலும் 15 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் ஐந்து பேர் ஆபத்தான நிலையில் உள்ளனர். வைத்தியசாலையின் அனைத்து நோயாளிகளும் வெளியேற்றப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

“மருத்துவ வசதிகள் சர்வதேச மனிதாபிமானச் சட்டத்தின் கீழ் பாதுகாக்கப்பட்டு சிறப்புப் பாதுகாப்பிற்கு உரியவை.

அவை தாக்குதலுக்கு ஆளாகக் கூடாது,” என்று டேனியல் பெல் கூறினார்.

ஓகஸ்ட் ஆறாம் திகதி முதல் சுமி நகரம் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் 33 பொதுமக்கள் கொல்லப்பட்டதுடன், 132 பேர் காயமடைந்துள்ளனர்.

சனிக்கிழமை காலை தாக்குதல் நடந்த நேரத்தில் 86 நோயாளிகள் மற்றும் 38 ஊழியர்கள் வைத்தியசாலையில் இருந்ததாக உக்ரேனிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

CATEGORIES
Share This