தேர்தல் சட்டத்தை மீறிய அனுர: பெப்ரல் அமைப்பு குற்றச்சாட்டு
தேசிய மக்கள் சக்தியின் (NPP) தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் அனுரகுமார திஸாநாயக்கவின் தலைமையில் மஹரகமவில் நடைபெற்ற அகில இலங்கை தாதியர் மாநாடு குறித்து தேர்தல் கண்காணிப்பு அமைப்பான பெப்ரல் (PAFFREL) அமைப்பு கவலை வெளியிட்டுள்ளது.
தேர்தல் ஆணைக்குழுவுக்கு பெப்ரல் அமைப்பு எழுதியுள்ள கடிதத்தில், தேர்தல் பிரச்சாரத்தில் அரச தாதியர்கள் தமது சீருடையில் கலந்துகொண்டமை தவறான ஒரு விடயமாகும்.
அரச நிதியின் ஊடாக வழங்கப்படும் சீருடைகளை தேர்தல் பிரசாரத்திற்காக பயன்படுத்துவது தேர்தல் சட்டங்களின் கீழ் நெறிமுறையற்றது மற்றும் சட்டவிரோதமானது எனவும் பெப்ரல் அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது.
சுதந்திரமான மற்றும் நியாயமான தேர்தலுக்காக இந்த சம்பவம் தொடர்பில் ஆராயுமாறு பெப்ரல் அமைப்பு தேர்தல் ஆணைக்குழுவிடம் சுட்டிக்காட்டியுள்ளது.
CATEGORIES செய்திகள்