தேர்தல் களம் நெருங்கி வரும் நிலையில் இலங்கைத்தீவு முழுவதிலும் பாரிய போராட்டத்துக்கு தயாராகும் ஜேவிபி

தேர்தல் களம் நெருங்கி வரும் நிலையில் இலங்கைத்தீவு முழுவதிலும் பாரிய போராட்டத்துக்கு தயாராகும் ஜேவிபி

தேர்தல் களம் நெருங்கி வரும் நிலையில் இலங்கைத்தீவு முழுவதிலும் பாரிய போராட்டத்துக்கு ஜேவிபி தயாராகி வருவதாக அரசியல் வட்டாரங்களில் பேசப்பட்டு வருகிறது.

அதன் உண்மைத் தன்மை எவ்வாறு இருப்பினும், மின்சார திருத்தச் சட்ட மூலத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த தினங்களில் புதிய ஒரு போராட்டத்தை ஜேவிபி தீர்மானித்திருந்தது.

அதன்படி, கடந்த வியாழக்கிழமை (09) இது தொடர்பில் ஊடக சந்திப்பொன்றும் இடம்பெற்றிருந்தது.

இதில், மக்கள் விடுதலை முன்னணியின் (ஜே.வி.பி) முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுனில் ஹந்துன்னெத்தி தலைமையில் ஜே.வி.பியை பிரநிதித்துவப்படுத்தும் தொழிற்சங்கங்கள் மின்சார திருத்தச் சட்ட மூலத்துக்கு எதிர்ப்பு தெரிவித்திருந்தன.

மின்சார சபையானது இலங்கைப் பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவுடன் இணைந்து செயற்படுகின்றது.

பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு , மின் கட்டணத் திருத்தம் தொடர்பில் பொதுமக்கள் தரப்பிலிருந்து கட்டணத்தை அதிகரிப்பதால் ஏற்படும் சாதக பாதகங்களை மேற்கொண்டு வருகிறது.

எனினும், திடீரென புதிதான ஒரு சட்டமூலம் கொண்டுவரப்பட்டுள்ளது.

நாட்டு மக்கள், தொழிற்சங்கங்கள், மின்சார மொத்த விற்பனை நிலையத்தைக் கோரி எந்தவொரு இடத்திலும் போராட்டங்களை நடத்தவில்லை‘ என தெரிவித்தார்.

சுனில் ஹந்துன்னெத்தியின் இந்தக் கருத்து ஜேவிபியின் அரசியல் கூட்டணி எனப்படும் தேசிய மக்கள் சக்தியைப் பிரநிதித்துவப்படுத்தி எதிர்காலத்தில் நடத்தப்படும் மின்சார தொழிற்சங்க நடவடிக்கைகளுக்கான எச்சரிக்கையாக இருக்கலாம் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

CATEGORIES
Share This