கோட்டாபயவை விலக்கிய அரகலய அமைப்பு ஜனாதிபதித் தேர்தலில் போட்டி

கோட்டாபயவை விலக்கிய அரகலய அமைப்பு ஜனாதிபதித் தேர்தலில் போட்டி

கோட்டபாய ராஜபக்சவை ஜனாதிபதிப் பதவியில் இருந்து விலக்கும் போராட்டத்தை முன்னெடுத்த அரகலய அமைப்பு, எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் வேட்பாளர் ஒருவரை நிறுத்தவுள்ளது.

மக்கள் போராட்ட முன்னணி என்ற பெயரில் சமீபத்தில் கட்சி ஒன்றை ஆரம்பித்த அரகலய அமைப்பினர், ஜனாதிபதி வேட்பாளராக சட்டத்தரணி நுவான் போபகே போட்டியிடுவார் என்று அறிவித்துள்ளனர்.

கொழும்பு பொது நூலகத்தில் நடைபெற்ற மக்கள் போராட்ட முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர்களை அறிவிக்கும் நிகழ்வில், கூட்டணியின் பிரதிநிதி லஹிரு வீரசேகர இதனைத் தெரிவித்தார்.

தற்போதைய சிக்கலான அரசியல் சூழ்நிலையில் இலங்கை மக்களின் அபிலாஷைகளை முன்னெடுத்துச் செல்லும் நோக்கில் பொது மக்களின் போராட்டத்தில் தனது வாழ்க்கையை நுவன் போபகே கூர்மைப்படுத்தியதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

சட்டத்தரணியான நுவான் போபகே, அடிப்படை உரிமை மீறல்களை தீவிரமாகக் கையாளும் அதே வேளையில், 2022ஆம் ஆண்டு மக்கள் போராட்டம் மூலம் சமூகத்தின் மாற்றத்தை நோக்கி நாட்டை வழிநடத்தும் இலக்கை முன்வைத்துள்ளார்.

மேலும், 2022 ஆம் ஆண்டில், காலி முகத்திடல் போராட்டத்தில் தனது தீவிர தலையீட்டிற்காக ஜெனிவா அமர்வில் உரையாற்றும் வாய்ப்பையும் பெற்றிருந்தார்.

அத்துடன், மீதொட்டமுல்ல அவலத்தை ஏற்படுத்திய கொலன்னாவ குப்பை மேட்டுக்கு எதிரான மக்கள் இயக்கத்தின் அமைப்பாளராகவும் நுவான் போபகே செயற்பட்டு வருகின்றார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

CATEGORIES
Share This