ராஜபக்சர் வீட்டில் நடந்த சண்டை; கன்னத்தில் அறை வாங்கியது யார் தெரியுமா?
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுக்குள் தினம் தினம் கருத்து முரண்பாடுகளும், கைகலப்புகளும் முற்றி வருவதாக தகவல்கள் கசிந்துள்ளன.
ஜனாதிபதித் தேர்தல் நெருங்கிவரும் சூழலில் கட்சிக்குள் பல்வேறு முரண்பாடுகள் முற்றியுள்ளன. கட்சியின் தேசிய அமைப்பாளர் பசில் ராஜபக்சவுக்கு ஆதரவாக ஒரு தரப்பும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு ஆதரவாக ஒரு தரப்பும் கட்சிக்குள் உருவாகியுள்ளன.
பொதுஜன பெரமுனவை பிரதிநிதித்துவப்படுத்தும் அமைச்சர்கள், இராஜாங்க அமைச்சர்கள், பிரதி அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்குஇடையில் பொது இடங்கள் மற்றும் கட்சியின் சந்திப்புகளில் கடுமையான கருத்து முரண்பாடுகள் ஏற்பட்டு வருகின்றன.
அண்மையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் விஜேராம இல்லத்தில் நடைபெற்ற கலந்துரையாடலொன்றில் அமைச்சர் கஞ்சன விஜேசேகர, நாமல் ராஜபக்சவின் ஊடகப் பிரிவில் உள்ள ஒருவரை கன்னத்தில் அறைந்துள்ளார். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த நிலையில் நாடாளுமன்ற உறுப்பினர்களான மஹிந்தானந்த அளுத்கமகே மற்றும் குணதிலக்க ராஜபக்ச ஆகியோருக்கு இடையில் கடும் வாக்குவாதமும் மோதலும் ஏற்பட்டுள்ளதாக தெரியவருகிறது. அதேபோன்று மேலும் பல சம்பவங்கள் இடம்பெற்றும் உள்ளன.
பொதுஜன பெரமுனவுக்கு ராஜபக்சர்களுக்கு சார்பாகவும் ரணிலுக்கு சார்பாகவும் இரண்டு அணிகள் தோன்றியுள்ளதால் இவ்வாறு அடிக்கடி கருத்து மோதல்களும் லைகலப்புகளும் உருவாகுவதாகவும் தகவல்கள் கசிந்துள்ளன.