வேப்பம் மரத்தில் இருந்து வடியும் இனிப்பு பால்- கந்தளாயில் வினோதம்!
கந்தளாய் டோசர் வீதியில் அமைந்துள்ள வீடொன்றின் தோட்டத்திலுள்ள வேப்பம் மரத்தில் இருந்து கடந்த 9ஆம் திகதி முதல் பால் போன்ற திரவம் வடிய ஆரம்பித்துள்ளதாகவும், இதனை காண ஏராளமானோர் வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
பால் போன்ற இந்த திரவம் இனிப்புச் சுவையுடன் இருப்பதாகவும் வருபவர்கள் அனைவரும் அதை அருந்துவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
புதிய வீடு கட்ட அடித்தளம் வெட்டத் தொடங்கிய அன்று, இந்த மரத்தில் இருந்து வெண்மையான திரவம் வெளிவருவதைக் கண்டதாகவும் இத்திரவம் தேன் மணம் வீசுவதாகவும் நிலத்தின் உரிமையாளர் தெரிவித்துள்ளார்.
CATEGORIES செய்திகள்