இரத்தினபுரியில் தொடரும் தோட்ட அதிகாரிகளின் அடாவடித்தனம்; இ.தொ.கா உடனடி நடவடிக்கை

இரத்தினபுரியில் தொடரும் தோட்ட அதிகாரிகளின் அடாவடித்தனம்; இ.தொ.கா உடனடி நடவடிக்கை

இரத்தினபுரி பகுதியில் தொடரும் தோட்ட அதிகாரிகளின் அடாவடித்தனம் தொடர்பாக சட்டநடவடிக்கை எடுக்குமாறு பொலிஸ் மா அதிபருக்கு அமைச்சர் ஜீவன் தொண்டமான் பணிப்புரை விடுத்துள்ளார்.

இரத்தினபுரி தும்பறை 82 ஆம் பிரிவில் உள்ள  தோட்ட அதிகாரி மற்றும் காவலாளி ஆகியோர் இணைந்து தோட்ட தொழிலாளர்களை  தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் உடனடி நடவடிக்கையினை மேற்கொள்ளுமாறு பொலிஸ் மா அதிபருக்கு நீர்வழங்கள் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு  அபிவிருத்தி அமைச்சரும் இலங்கை  தொழிலாளர் காங்கிரஸ் பொதுச்செயலாருமான ஜீவன் தொண்டமான் பணிப்புரை விடுத்துள்ளார். 

இரத்தினபுரி தும்பறை 82 ஆம் பிரிவில் உள்ள தொழிலாளர்கள் தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தேசிய அமைப்பாளரும் முன்னாள் மத்தியமாகாண சபை உறுப்பினருமான ஏ. பி.சக்திவேல் மற்றும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் உப தலைவர் சின்னையா இராஜமணி ஆகியோர் தாக்குதலுக்கு உள்ளான தொழிலாளர்களை நேரடியாக சந்தித்து கலந்துரையாடியுள்ளனர்.

மேலும், தாக்குதலுக்கு உள்ளான ஒரு ஆண் தொழிலாளி மற்றும் ஒரு பெண் தொழிலாளி ஆகிய இரண்டு பேரும் இரத்தினபுரி பொலிஸாரின் பாதுகாப்போடு பலத்த காயங்களோடு இரத்தினபுரி மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கபட்டுள்ளனர்.

அதேவேளை தாக்குதல் நடாத்திய தோட்ட அதிகாரிகளை பொலிஸார் கைது  செய்து நீதி மன்றத்தில் ஆஜர்படுத்தியுள்ளதாக இ.தொ.கா.வின் தேசிய அமைப்பாளர் ஏ. பி. சக்திவேல் மேலும் தெரிவித்தார்.

இரத்தினபுரி மாவட்டத்தில் சிறும்பான்மை மக்கள் பெரும்பான்மை மக்களினால் அச்சுறுத்தப்பட்டு தாக்கப்படுகின்ற சம்பவம் தொடர்ந்தும் இடம்பெற்று வருகிறது. இது போன்ற சம்பவம்  இனிமேலும் இடம் பெறக்கூடாது இருந்த போதிலும் இந்த தாக்குதல் சம்பவத்தை இ.தொ.கா. வன்மையாக கண்டிக்கிறது. இதன் பின் இவ்வாறான சம்பவம் நடைபெறாத  வண்ணம் எமது மக்களுக்கு அரசாங்கம் பாதுகாப்பு வழங்க வேண்டும். தற்பொழுது நடைபெற்ற தோட்ட அதிகாரிகளின் அநாகரீகமான அடாவடித்தனத்திற்கு சட்ட ரீதியாக தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொலிஸ் மா அதிபரிடம் அமைச்சர் ஜீவன் தொண்டமான் பணிப்புரை விடுத்துள்ளார்.

அதன்படி அடாவடி தனத்தில் ஈடுபட்ட தோட்ட அதிகாரிகள் மீது பாதுகாப்பு அதிகாரிகள்  தகுந்த சட்ட நடவடிக்கை எடுப்பார்கள் என தான் நம்புவதாக  சக்திவேல் மேலும் தெரிவித்தார். 

CATEGORIES
Share This