ரணில் – பசில் 6 ஆம் சுற்றுப் பேச்சு; அரசியல் கட்சிகளின் வியூகங்களை குழப்பும் தொடர் நாடகமா?

ரணில் – பசில் 6 ஆம் சுற்றுப் பேச்சு; அரசியல் கட்சிகளின் வியூகங்களை குழப்பும் தொடர் நாடகமா?

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் முன்னாள் தேசிய அமைப்பாளர் பசில் ராஜபக்சவுக்கும் நேற்று வியாழக்கிழமை கலந்துரையாடலொன்று இடம்பெற்றுள்ளது.

எதிர்கால அரசியல் விவகாரங்கள் தொடர்பாக இருவருக்குமிடையிலான ஆறாம் சுற்று பேச்சு வார்த்தை இதுவாகும்.

கலந்துரையாடப்பட்ட விடயங்கள் தொடர்பில் இன்று (10) ஊடகங்களுக்கு அறிவிக்கவுள்ளதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தெரிவித்துள்ளது.

இதற்கு முன்னரும் பலசுற்று பேச்சு வார்த்தைகள் இடம்பெற்ற போதிலும் சில கலந்துரையாடல்கள் இணக்கப்பாடின்றி நிறைவடைந்தன.

ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னதாக பொதுத் தேர்தலை நடத்த வேண்டும் என பசில் ராஜபக்ச தொடராச்சியாக ரணில் விக்ரமசிங்கவிடம் கூறிவருகின்றார்.

என்றாலும், ரணில் விக்ரமசிங்க, ஜனாதிபதி தேர்தலே முதலில் நடைபெறும் என பசிலிடம் திட்டவட்டமாக கூறிவிட்டார். அரசியலமைப்பின் பிரகாரம் ஜனாதிபதி தேர்தலே முதலில் நடத்தப்பட வேண்டும்.

என்றாலும் இவர்கள் இருவரும் தங்களை பிரபல்யப்படுத்திக்கொள்ளவும் மக்கள் மத்தியில் தங்களின் கட்சிகள் மற்றும் மீண்டும் செல்வாக்கை உயர்த்தும் நோக்கத்திலேயுமே இவ்வாறு அடிக்கடி சந்தித்து எதிர்ப்பு வெளியிடுவதும், ஆதரவு வெளியிடுவதுமாக இருக்கின்றனர் என அரசியல் விமர்சகர்கள் விமர்சிக்கின்றனர்.

ஜனாதிபதி தேர்தலுக்காக ஏனைய அரசியல் கட்சிகள் வகுக்கும் வியூகங்களை குழப்பும் தொடர் நாடகம் என்றும் விமர்சனங்கள் எழுந்துள்ளன.

CATEGORIES
Share This