தேசிய மக்கள் சக்தியின் அரசாங்கத்தில் ஒன்லைன் வர்த்தகத்துக்கு வரி

தேசிய மக்கள் சக்தியின் அரசாங்கத்தில் ஒன்லைன் வர்த்தகத்துக்கு வரி

தேசிய மக்கள் சக்தியின் அரசாங்கத்தின் கீழ், ஒன்லைன் வர்த்தகம் மற்றும் கொள்வனவுகளுக்கு வரி அறவிடுவது தொடர்பில் கலந்துரையாடி வருவதாக அக்கட்சியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

”இலங்கையில் ஒன்லைன் வர்த்தகம் வரிவிதிப்புக்கு உட்பட்டது அல்ல. நீங்கள் கொள்வனவு செய்யும் பொருட்களுக்கு எங்கு வரி செலுத்துகிறீர்கள்? எங்கு வரி விதிக்கப்பட்டது? வரி விதிக்கப்பட்டதா? இல்லையா என்பது தொடர்பில் எவருக்கும் தெரியாது.

இலங்கையின் வர்த்தக சட்டங்களில் மாற்றம் செய்ய வேண்டும். வரிவிதிப்புக்குள் ஒன்லைன் பரிவர்த்தனைகளை எவ்வாறு நுழைப்பது என்பது தொடர்பில் நாம் கலந்துரையாடல்களை நடத்தி வருகிறோம். உலகம் தொழில்நுட்பமயமாகிவிட்டது. அதற்கு ஏற்ப எமது சட்டங்கள் மறுசீரமைக்கப்பட வேண்டும்.

மக்களின் அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்வதே எமது பிரதான நோக்கம். வரவு – செலவுத் திட்ட பற்றாக்குறையை சமநிலைப்படுத்துவதற்கான பல்வேறு திட்டங்களையும் உருவாக்கி வருகிறோம்.

பொருளாதார வளர்ச்சியை ஏற்படுத்த வேண்டுமாயின் தற்போதைய போட்டிவாய்ந்தை சந்தைக்குள் நுழைவதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.

தொலைபேசிகளை உற்பத்தி செய்வதன் ஊடாகவே உள்ளது இன்று உலகில் பிரபல்யமாக உள்ள பொருட்களை உற்பத்தி செய்வதன் ஊடாக எமக்கு சந்தை வாய்ப்புகளை பெற்றுக்கொள்ள முடியாது.

ஆப்பிரிக சந்தைக்குள் இன்னமும் பாரிய அளிவில் எவரும் நுழையவில்லை. அங்கு எமக்கான வாய்ப்புகளை உருவாக்க முடியும். எமது தனித்துவமான உற்பத்திகளை சந்தைப்படுத்துவதன் ஊடாகவே சந்தை வாய்ப்புகளை கைப்பற்ற முடியும்.

தொடர்ச்சியாக பொருட்கள் சேவைகளை வழங்குதல், தரமான பொருட்கள் சேவையை வழங்குதல் அதேபோன்று அந்தப் பொருட்களை சாதாரண விலைக்கு வழங்குதல் அரசாங்கத்தின் பொறுப்பாகும். ஆகவே, அரசாங்கம் சந்தையை வழிநடத்த வேண்டும். எமது அரசாங்கத்தின் கொள்கைகள் அவ்வாறுதான் இருக்கும்.

தேயிலை, இறப்பர், கோப்பி போன்று இந்த அரசியல்வாதிகளும் பழைவாத சிந்தனைவாதிகளே. இவர்கள் நாட்டில் மாற்றத்தை ஏற்படுத்த முடியாது. மக்கள் பணத்தில் தமது கட்சியை நடத்துகின்றனர்.

ஐ.தே.கவில் உள்ள அனைவருக்கும் அரசாங்கத்தில் பதவிகள் உள்ளன. முழு கட்சியும் அரச நிதியில்தான் இயங்குகிறது. இந்த அரசியல் கலசாரத்தை முற்றாக மாற்றியமைக்க வேண்டும்.” என்றும் அனுரகுமார சுட்டிக்காட்டினார்.

CATEGORIES
Share This