தமிழக தேர்தல் பாதுகாப்புக்கு 10 ஆயிரம் போலீசார் வருகை!
தமிழகத்தில் பாராளுமன்ற தேர்தல் வருகிற 19ஆம் திகதி நடைபெற உள்ளது. இதையொட்டி தேர்தலுக்கான அனைத்து ஏற்பாடுகளும் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
அமைதியான முறையில் தேர்தலை நடத்தி முடிப்பதற்கான முன்னேற்பாடுகளை தேர்தல் ஆணைய அதிகாரிகள் ஒருங்கிணைந்து செய்து வருகிறார்கள்.
தமிழகத்தில் தேர்தல் பாதுகாப்பு பணியில் 1½ லட்சம் போலீசார் ஈடுபடுத்தப்பட உள்ளனர். இதுதொடர்பாக போலீஸ் டி.ஜி.பி. சங்கர்ஜிவால் அனைத்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுகள் மற்றும் அதிகாரிகளுக்கு உரிய உத்தரவுகளை பிறப்பித்துள்ளார்.
தேர்தல் நாளன்று வாக்குப்பதிவு மையங்களில் தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்திருக்க வேண்டும் என்றும், எந்த சூழலிலும் சட்டம்-ஒழுங்கை பாதிக்கும் வகையில் அசம்பாவித சம்பவங்கள் எதுவும் நடைபெற்று விடக்கூடாது என்றும் அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டு உள்ளன.
CATEGORIES Uncategorized