மும்பையில் அடுக்குமாடி குடியிருப்பு கட்டிடத்தில் தீ விபத்து!

மும்பையில் அடுக்குமாடி குடியிருப்பு கட்டிடத்தில் தீ விபத்து!

மும்பை அருகே தானே டோம்பிவலியில் உள்ள காசா அரேலியா கட்டிடத்தில் இன்று பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு துறை வீரர்கள் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

கட்டிடங்கள் முழுவதும் தீ பரவ தொடங்குவதற்கு முன்னதாகவே கட்டிடத்தில் உள்ள பொதுமக்களை மீட்பு குழுவினர் பத்திரமாக வெளியேற்றினர். பல தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்திற்கு வந்த நிலையில், தீயை அணைக்கும் முயற்சியானது தொடர்ந்து நடைபெற்று வருகிறது. லோதா குடியிருப்பு வளாகத்தில் உள்ள காசா அரேலியா கட்டிடத்தின் 11 வது மாடியில் இருந்து ஷார்ச் சர்க்யூட் காரணமாக தீ விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது. கட்டிடத்தின் 11 வது தளத்தில் ஏற்பட்ட தீ, 18 வது மாடி வரை பரவியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

CATEGORIES
TAGS
Share This