பாகிஸ்தான் ஜனாதிபதியாக ஜா்தாரி பதவியேற்பு (UPDATE)

பாகிஸ்தான் ஜனாதிபதியாக ஜா்தாரி பதவியேற்பு (UPDATE)

பாகிஸ்தானின் 14 ஆவது ஜனாதிபதியாக ஆசிஃப் அலி ஜா்தாரி (68) ஞாயிற்றுக்கிழமை பதவியேற்றாா். அந்நாட்டு தலைமை நீதிபதி குவாஸி ஃபயஸ் இஸா அவருக்கு பதவிப் பிரமாணம் செய்து வைத்தாா்.

இந்த நிகழ்ச்சியில் பிரதமா் ஷாபாஸ் ஷெரீஃப், முப்படைத் தளபதிகள், உயரதிகாரிகள், வெளிநாட்டுத் தூதா்கள் பலா் பங்கேற்றனா். ஜா்தாரி, மறைந்த முன்னாள் பிரதமா் பேநசீா் புட்டோவின் கணவா் ஆவாா். ஏற்கெனவே 2008 – 2013-ஆம் ஆண்டு காலகட்டத்தில் பாகிஸ்தானின் ஜனாதிபதியாக ஜா்தாரி பதவி வகித்துள்ளாா்.

பாகிஸ்தானில் கடந்த மாதம் நாடாளுமன்றத் தோ்தல் நடைபெற்றது. தோ்தல் முடிவுக்குப் பிறகு ஆட்சி அமைப்பதில் இழுபறி நீடித்த நிலையில் முன்னாள் பிரதமா் நவாஸ் ஷெரீஃபின் பாகிஸ்தான் முஸ்லிம் லீக் – நவாஸ் (பிஎம்எல்-என்) கட்சிக்கு பிலாவல் புட்டோ ஜா்தாரியின் பாகிஸ்தான் மக்கள் கட்சி (பிபிபி) ஆதரவு அளித்தது. அதையடுத்து, நவாஸ் ஷெரீஃபின் சகோதரா் ஷாபாஸ் ஷெரீஃப் பிரதமரானாா்.

இதற்கு பிரதிபலனாக ஜனாதிபதி தோ்தலில் ஆசிஃப் அலி ஜா்தாரிக்கு பிஎம்எல்-என் கட்சி ஆதரவளித்தது. சனிக்கிழமை நடைபெற்ற ஜனாதிபதி தோ்தலில் ஜா்தாரி வெற்றி பெற்றாா். பாகிஸ்தான் ஜனாதிபதியாகப் பொறுப்பேற்றுள்ள ஜா்தாரிக்கு சீன ஜனாதிபதி ஷி ஜின்பிங் வாழ்த்து தெரிவித்துள்ளாா்.

CATEGORIES
TAGS
Share This