வெப்பமான வானிலை குறித்து மீண்டும் எச்சரிக்கை!

வெப்பமான வானிலை குறித்து மீண்டும் எச்சரிக்கை!

நாளை (09) நாடளாவிய ரீதியில் பல பகுதிகளில் வெப்பநிலை அவதானம் செலுத்த வேண்டிய நிலை வரை மேலும் அதிகரிக்கக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதன்படி, வடமேற்கு, தெற்கு மற்றும் வடமத்திய மாகாணங்களிலும் மொனராகலை, இரத்தினபுரி, மன்னார், வவுனியா முல்லைத்தீவு மற்றும் திருகோணமலை மாவட்டங்களின் சில இடங்களிலும் மனித உடலால் உணரப்படும் வெப்பம் அவதானம் செலுத்த வேண்டிய மட்டத்தில் இருக்கும் என திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

போதுமான அளவு தண்ணீர் குடிப்பது, முடிந்தவரை நிழலான இடங்களில் ஓய்வெடுப்பது, கடுமையான வெளிப்புறச் செயல்பாடுகளைக் கட்டுப்படுத்துவது உள்ளிட்ட சுகாதார ஆலோசனைகளைப் பின்பற்ற வேண்டும் என்று திணைக்களம் அறிவித்துள்ளது.

CATEGORIES
TAGS
Share This