யாழ் மக்களுக்கு எச்சரிக்கை ; கனடா அனுப்புவதாக மோசடி!

யாழ் மக்களுக்கு எச்சரிக்கை ; கனடா அனுப்புவதாக மோசடி!

யாழ்ப்பாணத்தில் கனடாவுக்கு அனுப்புவதாக கூறி கடந்த மூன்று வருடங்களில் மாத்திரம் 7.5 கோடி ரூபா மோசடி செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

யாழ்ப்பாண மாவட்ட விசேட குற்றவிசாரணைப் பிரிவினருக்குக் கிடைக்கப் பெற்ற 21 முறைப்பாடுகளின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட விசாரணகளின்போதே இந்தத் தகவல் தெரியவந்துள்ளது.

இது குறித்து மேலதிக விசாரணைகள் காவல்துறையினரால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இதேவேளை, கனடாவுக்கு அனுப்புவதாக ஆசைகாட்டி யாழ்ப்பாணத்தில் பெருந்தொகை மோசடிகள் தொடர்ச்சியாக இடம்பெற்று வருகின்றன என யாழ்ப்பாண மாவட்ட சிரேஷ்ட காவல்துறை அத்தியட்சகர் ஜகத் விசாந்த தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் பொதுமக்கள் மிகவும் அவதானமாக இருக்க வேண்டும் எனவும் அவர் மேலும் அறிவுறுத்தியுள்ளார்.

CATEGORIES
TAGS
Share This