ஜனாதிபதி – கிழக்கு மாகாண முஸ்லிம் எம்.பிக்கள் சந்திப்பு!

ஜனாதிபதி – கிழக்கு மாகாண முஸ்லிம் எம்.பிக்கள் சந்திப்பு!

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கும் கிழக்கு மாகாண முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கிடையிலான சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.

குறித்த சந்திப்பு இன்று காலை நாடாளுமன்ற கட்டடத் தொகுதியில் இடம்பெற்றுள்ளது.

இதன்போது, அம்பாறை மாவட்ட ஆசிரியர்களின் இடமாற்ற பிரச்சினைகள், கிழக்கு மாகாண சிவில் நிர்வாக சேவை அதிகாரிகளின் நியமனம், கிழக்கு முஸ்லிம்களின் காணி பிரச்சினை, காத்தான்குடியில் மூடப்பட்டுள்ள பள்ளிவாசலை தொழுகைக்கு அனுமதிக்கும் விவகாரம் மற்றும் கிழக்கு மாகாணத்தின் கல்வி மேம்பாடு தொடர்பில் விரிவாக ஆராயப்பட்டுள்ளது.

இந்த சந்திப்பில், கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் நாடாளுமன்ற உறுப்பினர்களான எச்.எம்.எம். ஹரீஸ், ஏ.எல்.எம். அதாஉல்லா, எம்.சி.பைசால் காசிம், அலி ஸாஹிர் மௌலானா மற்றும் எஸ்.எம்.எம். முஷாரப் ஆகியோர் கலந்து கொண்டுள்ளனர்.

CATEGORIES
TAGS
Share This