ஜனாதிபதி தேர்தல் குறித்து தேர்தல் ஆணையாளரின் அறிவிப்பு!

ஜனாதிபதி தேர்தல் குறித்து தேர்தல் ஆணையாளரின் அறிவிப்பு!

ஜனாதிபதி தேர்தலானது உரிய தினத்தில் நடத்தப்படும் என தேர்தல்கள் ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்தார்.

எமது செய்திசேவையுடன் இடம்பெற்ற நேர்காணல் ஒன்றின் போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டார்.

அதேநேரம், ஜனாதிபதி தேர்தலை ஒத்திவைப்பதற்கான எந்தவொரு சாத்தியகூறுகளும் இல்லை என அவர் குறிப்பிட்டார்.

ஜனாதிபதி தேர்தலுக்கு 10 பில்லியன் ரூபாய் நிதி கோரப்பட்டுள்ளது.

இந்தநிலையில், ஜனாதிபதி தேர்தலானது எந்தவொரு சந்தரப்பத்திலும் பிற்போடப்படமாட்டாது என தேர்தல்கள் ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்தார்.

CATEGORIES
TAGS
Share This