சென்னையில் NIA அதிகாரிகள் சோதனை!

சென்னையில் NIA அதிகாரிகள் சோதனை!

கா்நாடக மாநிலம், பெங்களூரில் உள்ள உணவகத்தில் நடந்த குண்டு வெடிப்பு சம்பவம் தொடர்பாக, தேசிய புலனாய்வு முகமையினர் சென்னையில் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

சென்னை மண்ணடி பிடாரி கோயில் தெரு உள்ளிட்ட இடங்களில் என்ஐஏ அதிகாரிகள் குழுவினர் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த வழக்கில் விசாரணைக்காக 5 பேரை என்ஐஏ அதிகாரிகள் அழைத்துச் சென்றதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

பெங்களூரு புரூக்ஃபீல்ட் பகுதியில் உள்ள ராமேசுவரம் கஃபேயில் சனிக்கிழமையன்று குறைந்த தீவிரம் கொண்ட குண்டுவெடிப்பில் ஊழியா்கள் மற்றும் வாடிக்கையாளா்கள் உள்பட 10 போ் காயமடைந்தனா்.

‘வாடிக்கையாளா்’ உணவகத்தின் கை கழுவும் பகுதிக்கு அருகில் விட்டுச் சென்ற பையில் டைமா் பொருத்தப்பட்ட மேம்பட்ட வெடிக்கும் கருவியால் இந்த வெடிப்பு ஏற்பட்டதாக பெங்களூரு காவல்துறை தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

CATEGORIES
TAGS
Share This