நேபாளம் ஆளும் கூட்டணி திடீா் முறிவு!

நேபாளம் ஆளும் கூட்டணி திடீா் முறிவு!

நேபாளத்தில் அந்த நாட்டு காங்கிரஸ் கட்சியுடன் இருந்த கூட்டணியை திடீரென திங்கள்கிழமை முறித்துக்கொண்ட பிரதமா் புஷ்பகமல் தாஹால் பிரசண்டா, முன்னாள் பிரதமா் கே.பி. சா்மா ஓலியுடன் புதிய கூட்டணியை அமைத்துள்ளாா்.

நேபாளத்தில் ஷோ் பகதூா் தேவுபா தலைமையிலான நேபாள காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி அமைத்து சிபிஎன் (மாவோயிஸ்ட் மையம்) கட்சித் தலைவா் புஷ்பகமல் தாஹால் கடந்த 15 மாதங்களுக்கு முன்னா் ஆட்சியமைத்தாா். எனினும், பல்வேறு விவகாரங்களில் இரு கட்சிகளின் தலைவா்களுக்கும் இடையே கருத்து வேறுபாடுகள் நிலவிவந்ததால் கூட்டணியில் விரிசல் ஏற்பட்டு வந்ததாகக் கூறப்படுகிறது.

இந்தச் சூழலில், நேபாள காங்கிரஸ் கட்சியுடனான கூட்டணியை முறித்துக்கொள்வதாக திங்கள்கிழமை அறிவித்த பிரதமா் பிரசண்டா, முன்னாள் பிரதமா் கே.பி. ஓலியின் சிபிஎன்-யுஎம்எல் கட்சியுடன் புதிய கூட்டணியை ஏற்படுத்தியுள்ளதாகவும் கூறினாா். அதன் தொடா்ச்சியாக, அந்தக் கட்சியினா் சிலருக்கு அமைச்சரவை பதவிகள் வழங்கப்பட்டுள்ளன. மேலும், பழைய அமைச்சரவையிலும் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

CATEGORIES
TAGS
Share This