சென்னையில் நாளை மிக கனமழைக்கு வாய்ப்பு!
சென்னையில் நாளை (08) மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை வானிலை ஆய்வு மையம் சார்பில், சென்னைக்கு ஏற்கெனவே ஆரஞ்சு நிற எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்த நிலையில், நாளை சென்னையில் மிக கனமழை பெய்யவுள்ளது.
சென்னையில் இன்று நள்ளிரவு முதல் நாளை (08) இரவு 8 மணி வரை அதீத கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக தமிழ்நாடு டெல்டா வெதர்மேன் ஹேமச்சந்தர் தெரிவித்துள்ளார்.
மேலும், சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நாளை குறுகிய காலத்தில் அதிக மழை (2-3 மணி நேரங்களில் 25 செ.மீ மேல்) பெய்யவுள்ளதாகவும் எச்சரித்துள்ளார்.
வடகோடி மாவட்டங்களான சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம் மாவட்டங்களில் படிப்படியாக மழை துவங்கும்.
நாளை இரவு 8 மணிக்குள் பரவலாக அநேக இடங்களில் கனமழையும், பல இடங்களில் மிக கனமழையும், ஒருசில இடங்களில் அதீத கனமழையும் பதிவாகும் எனவும் டெல்டா வெதர்மேன் ஹேமச்சந்தர் குறிப்பிட்டுள்ளார்.