சென்னையில் கடும்புகை மூட்டம்: விமான சேவை பாதிப்பு!
சென்னையின் பல இடங்களில் ஞாயிற்றுக்கிழமை புகைமூட்டம் நிலவி வருகிறது. வாகனோட்டிகள் இதனால் பெரிதும் பாதிக்கப்பட்டு வருகிறார்கள்.
டெல்லி மற்றும் சென்னையில் நிலவி வருகிற வானிலை காரணமாக, பார்வைத் தூரம் தெளிவாக இல்லாததால் விமான சேவைகளில் மாற்றம் ஏற்பட்டுள்ளது.
இண்டிகோ விமான நிறுவனம் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளதாவது:
மோசமான வானிலை காரணமாக, டெல்லி மற்றும் சென்னையில் விமான சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன.
பயணிகள் விமானத்தின் சேவை குறித்த நிலையை விமான நிலையத்துக்கு செல்லும்முன் சோதிக்குமாறு அதில் குறிப்பிட்டுள்ளது.
CATEGORIES Uncategorized