சென்னையில் குடிநீர் விநியோகம் நிறுத்தம்!

சென்னையில் குடிநீர் விநியோகம் நிறுத்தம்!

சென்னை – தியாகராய நகர் வெங்கட் நாராயண வீதி மற்றும் சேமியர்ஸ் வீதியில் குடிநீர் குழாய் இணைப்பு பணிகள் சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனத்தால் மேற்கொள்ளப்படுகிறது.

அதனால் 8 ஆம் திகதி காலை 6 மணி முதல் 9 ஆம் திகதி காலை 6 மணி வரை தேனாம்பேட்டை, கோடம்பாக்கம், அடையாறு மண்டலங்களுக்கு உட்பட்ட பகுதிகளுக்கு குழாய்கள் மூலம் வழங்கப்படும் குடிநீர் விநியோகம் நிறுத்தம் செய்யப்படுகிறது.

எனவே பொதுமக்கள் முன் எச்சரிக்கையாக வேண்டிய அளவு குடிநீரை சேமித்து வைத்து கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். அவசரக் தேவைகளுக்கு லாரிகள் மூலம் குடிநீர் பெற்றுக் கொள்ள இணைய தளத்தை பயன்படுத்தி கொள்ளலாம்.

மேலும் குடிநீர் இணைப்பு இல்லாத பகுதிகள் மற்றும் அழுத்தம் குறைவான பகுதிகளுக்கு குடிநீர் தொட்டிகள் மற்றும் தெரு நடைகளுக்கு லாரிகள் மூலம் வழங்கப்படும் குடிநீர் விநியோகம் எவ்வித தடையின்றி வழக்கம் போல் சீரான முறையில் மேற்கொள்ளப்படும் என்று இந்திய குடிநீர் வாரியம் தெரிவித்துள்ளது.

CATEGORIES
TAGS
Share This