காசா மோதல் மிகவும் கவலை அளிக்கும் விசயமாக உள்ளது – ஜெய்சங்கர்

காசா மோதல் மிகவும் கவலை அளிக்கும் விசயமாக உள்ளது – ஜெய்சங்கர்

இஸ்ரேல் எல்லைக்குள் நுழைந்த காசா பயங்காரவாதிகள் பொதுமக்களை சரமாரியாக சுட்டுக்கொலை செய்தனர். மேலும், 25-க்கும் மேற்பட்டோரை பிணைக் கைதிகளாக பிடித்து சென்றனர்.

இதனால் ஹமாஸ் அமைப்புக்கு எதிராக போர் பிரகடனம் செய்த இஸ்ரேல், காசா மீது தாக்குல் தொடர்ந்தது. வடக்கு காசா மீது தாக்குதல் நடத்திய இஸ்ரேல் ராணுவம் அதன்பின் காசா முழுவதும் தனது தாக்குதலை விரிவுப்படுத்தியது.

இதனால் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் உயிரிழந்துள்ளனர். இதில் குழந்தைகள் மற்றும் பெண்கள் அதிக அளவில் அடங்குவர். மேலும், லட்சக்கணக்கான மக்கள் உணவு, தங்குவதற்கு இடமின்றி தவித்து வருகிறார்கள்.

மனிதாபிமான நெருக்கடிகள் உருவாகிய நிலையில் பெரும்பாலான நாடுகள் போர் நிறுத்தம் தேவை என வலியுறுத்தின. ஆனால் ஹமாஸ் அமைப்பினரை முற்றிலும் ஒழித்து, இஸ்ரேல் நாட்டிற்கு அச்சுறுத்தல் இல்லை என்பதை உறுதி செய்யும் வரை போர் தொடரும் என இஸ்ரேல் பிரதமர் நேதன்யாகு தெரிவித்துள்ளார்.

இதற்கிடையே பிணைக்கைதிகள் மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என இஸ்ரேலுக்கு எதிராக பாதிக்கப்பட்ட குடும்பங்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

ஒரு பக்கம் அமெரிக்கா ஆயுத உதவிகள் வழங்கி வருகிறது. மறுபக்கம் போர் நிறுத்தத்தை வலியுறுத்துகிறது. இந்த நிலையில்தான் ரம்ஜானை முன்னிட்டு போர் நிறுத்தம் ஏற்படலாம் என அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.

இஸ்ரேல்- ஹமாஸ் போரில் முதலில் இந்தியா இஸ்ரேலுக்கு ஆதரவாக கருத்து தெரிவித்திருந்தது. பின்னர் பொதுமக்கள் கொல்லப்பட்டு வந்த நிலையில், போர் நிறுத்தம் தேவை என குரல் கொடுத்து வருகிறது.

இந்த நிலையில்தான் இந்திய வெளியுறவுத்துறை மந்திரியாக ஜெய்சங்கர், “மோதல் காரணமாக மனிதாபிமான நெருக்கடிகள் அதிகரித்துள்ள நிலையில் நிலையான தீர்வு தேவை. இது மிகவும் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் உடனடி நிவாரணமாக இருக்கும்.

அதேவேளையில் பயங்கரவாதம் மற்றும் பொதுமக்களை பிணைக்கைதிகளாக பிடித்துச் சென்றதை ஏற்றுக் கொள்ள முடியாது என்பதில் தெளிவாக இருக்கிறோம். சர்வதேச மனிதாபிமானச் சட்டங்கள் எப்போதும் மதிக்கப்பட வேண்டும் என்பதையும் சொல்ல வேண்டியதில்லை” என்றார்.

ஜெனிவாவில் ஐ.நா. மனித உரிமை கவுன்சிலின் 55ஆவது செசன் நடைபெற்றது. இதில் காணொலி காட்சி மூலம் கலந்து கொண்ட ஜெய்சங்கர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இஸ்ரேல் மீது கடந்த வரும் அக்டோபர் 7ஆம் திகதி ஹமாஸ் நடத்திய தாக்குதலில் 1200 பேர் கொல்லப்பட்டனர். காசா மீது இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதலில் இதுவரை உயிரிழந்தோர் எண்ணிக்கை 30 ஆயிரத்தை நெருங்கியுள்ளது. ஹமாஸ் அமைப்பினரை சேர்ந்த 10 ஆயிரம் பேரை கொன்றுள்ளதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளார்.

CATEGORIES
TAGS
Share This