அனைத்து அலுவலக பணிகளையும் நிறுத்திய பாகிஸ்தான் காபந்து பிரதமர்!

அனைத்து அலுவலக பணிகளையும் நிறுத்திய பாகிஸ்தான் காபந்து பிரதமர்!

பாகிஸ்தானில் பொதுத்தேர்தல் நடைபெற்று முடிவுகளும் அறிவிக்கப்பட்டுள்ளன. தேர்தல் நடைபெற்று 3 வாரங்கள் முடிவடைய இருக்கும் நிலையிலும் இன்னும் ஆட்சி அமைக்கப்படவில்லை.

இந்த நிலையில்தான், பாகிஸ்தானின் நாட்டின் காபந்து பிரதமராக இருக்கும் அன்வார்-உல்-ஹக் கக்கார் தனது பிரதமர் அலுவலக பணிகள் அனைத்தையும் நிறுத்தியுள்ளார். தனது ஒப்புதலுக்காக வைக்கப்பட்டுள்ள கோப்புகள் அனைத்திலும் கையழுத்திடவில்லை. முக்கியமான முடிவுகள் எடுப்பதை தவிர்த்துள்ளார். “புதிய அரசின் தொடக்கத்திற்காக நாங்கள் காத்திருக்கிறோம். எங்களுடைய செயல்பாடுகள், திட்டங்கள் உள்ளிட்ட அனைத்தையும் புதிய நிர்வாகத்திடம் வழங்குவோம்” என்றார்.

பாகிஸ்தானின் காபந்து அரசின் பாராளுமன்ற விவகாரத்துறை அமைச்சகம், பிப்ரவரி 29-ந்தேதி பாராளுமன்றத்தை கூட்ட வேண்டும். புதிய உறுப்பினர்கள் பதவி ஏற்பதற்காக இதை நடவடிக்கைக்கு ஒப்புதல் வழங்க வேண்டும் என அதிபர் ஆரிஃப் அல்விக்கு கடிதம் அனுப்பியிருந்தது. ஆனால், பாராளுமன்ற விவகாரத்துறை அமைச்சகத்தின் கோரிக்கை பாகிஸ்தான் அதிபர் நிராகரித்துள்ளார்.

மேலும், புதிய உறுப்பினர்கள் பதவி ஏற்பதற்கு முன்னதாக அனைத்து ஒதுக்கீடு இடங்களும ஒதுக்கப்படும் எனத் தெரிவித்துள்ளார்.

2018-ம் ஆண்டும் ஆரிஃப் அலிவி பாகிஸ்தான் அதிபராக தேர்வு செய்யப்படுவதற்கு முன்னதாக இம்ரான் கான் கட்சியின் பாகிஸ்தான் தெஹ்ரீக்-இ-இன்சாப் உறுப்பினராக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இம்ரான் கான் கட்சி அதிக இடங்களை பிடித்தும் ஆட்சியமைக்க முடியவில்லை.

நவாஸ் ஷெரீப்பின் பாகிஸ்தான் முஸ்லீம் லீக்- பிலாவல் பூட்டோவின் பாகிஸ்தான் மக்கள் கட்சி ஆகியவை இணைந்து ஆட்சி அமைக்க இருக்கின்றன. அடுத்த வாரம் ஆட்சி அமைக்கலாம் எனத் தகவல் வெளியாகியுள்ளது.

நவாஸ் ஷெரீப் சகோதரர் ஷெபாஷ் ஷெரீப் பிரதமராக பதவி ஏற்க இருக்கிறார். ஆசிப் அலி சர்தாரி ஜனாதிபதி தேர்தலுக்கு இரு கட்சி சார்பிலான வேட்பாளராக நிறுத்தப்படுவார் எனத் தெரிகிறது.

பாகிஸ்தானின் அரசியலமைப்பு சட்டத்தின்படி தேர்தல் முடிந்து 21 நாட்களுக்குள் பாராளுமன்றத்தை கூட்ட வேண்டும். அதன்படி 29-ந்தேதி பாராளுமன்றத்தை கூட்ட அமைச்சகம் ஒப்பதல் கேட்டிருந்தது.

CATEGORIES
TAGS
Share This