அதிகளவு குழந்தைகள் வெப்பம் தொடர்பான நோய்களால் பாதிப்பு!

அதிகளவு குழந்தைகள் வெப்பம் தொடர்பான நோய்களால் பாதிப்பு!

கடந்த சில வாரங்களாக அதிக வெப்பம் நிலவுவதால், நாடு முழுவதிலும் உள்ள பாடசாலை மாணவர்கள் பலர் வெப்பம் தொடர்பான நோய்களால் பாதிக்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக லேடி ரிட்ஜ்வே வைத்தியசாலையின் ஆலோசகர் குழந்தை நல மருத்துவர் வைத்தியர் தீபால் பெரேரா தெரிவித்தார்.

எனவே, குழந்தைகளுக்கு வெப்பம் தொடர்பான நோய் வராமல் தடுக்க போதுமான கனிமச்சத்துக்களுடன் கூடிய திரவங்களை பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்கள் வழங்க வேண்டும் என்று மருத்துவர் கேட்டுக்கொண்டார்
தற்போதைய வெப்பமான காலநிலையின் போது நீரிழப்பு மற்றும் வெப்ப அதிர்ச்சியால் பாதிக்கப்படுகின்றனர்.

“போதுமான திரவங்கள் மற்றும் தாதுப்பொருட்களை எடுத்துக் கொள்ளத் தவறினால், சோர்வு, தலைவலி, தூக்கம், வாந்தி, உடல் வலி, தூக்கமின்மை, மற்றும் பசியின்மை போன்ற முக்கியமான உடல்நலச் சிக்கல்கள் ஏற்படலாம்” என்று டாக்டர் பெரேரா கூறினார்.

CATEGORIES
TAGS
Share This