தலைமைகளுக்கு தண்ணி காட்டிய பைசல், இஸ்ஹாக், ஹரீஸ்

தலைமைகளுக்கு தண்ணி காட்டிய பைசல், இஸ்ஹாக், ஹரீஸ்

ஒன்பதாவது பாராளுமன்றத்தின் ஐந்தாவது கூட்டத்தொடர் இன்று(07) ஆரம்பமாகிய நிலையில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அரசாங்கத்தின் கொள்கை பிரகடன உரையை முன்வைத்தார்.

ஜனாதிபதி சபையில் உரையாற்றும் போது, ​​ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்பினர்கள் குழு சபையை விட்டு வெளியேறியதுடன், தேசிய மக்கள் சக்தி உறுப்பினர்கள் எவரும் சபையில் இருக்கவில்லை.

ஆனால், ஐக்கிய மக்கள் சக்தியில் இருந்து பாராளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்பட்ட ராஜித சேனாரத்ன, சரத் பொன்சேகா, பாட்டளி சம்பிக்க ரணவக்க, இஷாக் ரஹ்மான் மற்றும் குமார வெல்கம ஆகியோரோடு பைசல் காசிம், எச்.எம்.எம் ஹரீஸ் ஆகியோர சபையில் இருந்தனர்.

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் பதியுதீன் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவுப் ஹக்கீம் ஆகியோர் அரசுக்கு எதிராக இருந்தாலும் அந்த கட்சியில் அங்கத்துவம் பெற்று நாடாளுமன்றம் வந்த உறுப்பினர்களோ அரசுக்கு ஆதரவாக தொடர்ந்தும் இருந்து வருகின்றனர். இதனால் இவ்விரு பெரும் கட்சிகளின் ஆதரவாளர்கள் நிலைகுலைந்துள்ளனர்.

CATEGORIES
TAGS
Share This