சிறந்த வனவிலங்கு புகைப்பட கலைஞருக்கான சர்வதேச விருது அறிவிப்பு!

சிறந்த வனவிலங்கு புகைப்பட கலைஞருக்கான சர்வதேச விருது அறிவிப்பு!

இவ் வருடத்திற்கான சிறந்த வனவிலங்கு புகைப்பட கலைஞர்கள் விருதினை பிரித்தானியாவைச் சேர்ந்த சுயாதீன புகைப்படக் கலைஞர் நிமா சரிகானி பெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விருதினை லண்டனில் உள்ள இயற்கை வரலாற்று அருங்காட்சியகம் (Natural History Museum) வழங்குகிறது.

நிமா சரிகானி ஒரு அமைதியான சூழலில் இளம் துருவ கரடி பனிப்பாறையில் உறங்கும் காட்சியை புகைப்படம் எடுத்துள்ளார். இதற்கு “ஐஸ் பெட்” என்று தலைப்பிடப்பட்டுள்ளது.

இந்த புகைப்படம் சுற்றுச்சூழலின் அழகு, பாதிப்பு மற்றும் பாதுகாப்பு முக்கியத்துவத்தை எடுத்துக்காட்டுகிறது.

“வியப்பூட்டி மனதை உருக்கிய புகைப்படம் நமது பூமியின் அழகையும் பலவீனத்தையும் பார்க்க அனுமதிக்கிறது நிமா சரிகானியின் சிந்தனையைத் தூண்டிய குறித்த புகைப்படம் ஒரு விலங்குக்கும் அதன் வாழ்விடத்திற்கும் இடையிலான ஒருங்கிணைந்த பிணைப்பு, காலநிலை மாற்றத்தினால் ஏற்பட்டுள்ள வெப்பமயமாதல் மற்றும் வாழ்விட இழப்பின் தீங்கு விளைவிக்கும் தாக்கங்களின் காட்சியை பிரதிநிதித்துவப்படுத்துகிறது“ என இயற்கை வரலாற்று அருங்காட்சியகத்தின் பணிப்பாளர் கலாநிதி டக்ளஸ் குர் தெரிவித்துள்ளார்.

நிமா சரிகானி நோர்வேயின் ஸ்வால்பார்ட் தீவுக்கூட்டத்தில் அடர்ந்த மூடுபனி வழியாக துருவ கரடிகளைத் தேடி மூன்று நாட்கள் மேற்கொண்ட பயணத்தை தொடர்ந்து இந்த புகைப்படத்தை பிடித்துள்ளார்.

உலகெங்கிலும் உள்ள வனவிலங்கு புகைப்பட கலைஞர்களின் 25 புகைப்படங்கள் இறுதி போட்டிக்கு தெரிவு செய்யப்பட்டது. அதில் நிமா சரிகானி புகைப்படம் முதலிடம் பிடித்துள்ளது.

இந்நிலையில், போட்டியில் பங்கேற்ற மற்றைய நான்கு சிறந்த இறுதிப் போட்டியாளர்கள் மிகவும் பாராட்டப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

CATEGORIES
TAGS
Share This