இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட தமிழக கடற்தொழிலாளர்கள் தாயகம் திரும்பினர்!

இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட தமிழக கடற்தொழிலாளர்கள் தாயகம் திரும்பினர்!

இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட தமிழக கடற்தொழிலாளர்கள் இன்று (066) சென்னை திரும்பினர்.

புதுக்கோட்டையை சேர்ந்த தமிழக கடற்தொழிலாளர்கள் 12 பேர் நடுக்கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்த போது இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்டனர். இந்நிலையில் அவர்கள் அனைவரையும் இலங்கை நீதிமன்றம் விடுதலை செய்தது.

அதனைத் தொடர்ந்து விமானம் மூலம் கொழும்புவிலிருந்து இன்று காலை சென்னை வந்தடைந்த கடற்தொழிலாளர்கள் அனைவரையும், அவர்களின் சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்க தமிழக அரசு ஏற்பாடு செய்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

CATEGORIES
TAGS
Share This