இலங்கையில் கைதுசெய்யப்பட்ட ராமேஸ்வரம் கடற்தொழிலாளர்கள் 24 பேர் விடுதலை!
இலங்கை சிறையில் அடைக்கப்பட்டிருந்த ராமேஸ்வரம் கடற்தொழிலாளர்கள் 24 பேரை இலங்கை நீதிமன்ற நீதிபதி விடுதலை செய்து உத்தரவிட்டுள்ளதாக இந்தியச் செய்திகள் தெரிவிக்கின்றன.
ஒரு படகோட்டிக்கு மட்டும் 6 மாதம் சிறை தண்டனை வழங்கி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
கடந்த மாதம் 21ம் திகதி, எல்லை தாண்டி மீன் பிடித்ததாக ராமேஸ்வரம் கடற்தொழிலாளர்கள் 25 பேர் சிறைபிடிக்கப்பட்டனர்.
விடுதலை செய்யப்பட்ட கடற்தொழிலாளர்கள் ஓரிரு நாட்களில் தாயகம் திரும்புவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
CATEGORIES Uncategorized