இலங்கையில் இரட்டிப்பான குழந்தைப் புற்று நோயாளர்கள்!

இலங்கையில் இரட்டிப்பான குழந்தைப் புற்று நோயாளர்கள்!

இலங்கையில் குழந்தைப் புற்று நோயாளர்களின் எண்ணிக்கை 900 ஆக உயர்ந்துள்ளதாக கொழும்பு லேடி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையின் குழந்தைகள் நல மருத்துவர் வைத்தியர் தீபால் பெரேரா தெரிவித்துள்ளார்.

இதேவேளை புற்றுநோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை இதற்கு முன்னர் 450 ஆக இருந்த நிலையில் ஒரு வருடத்தில் அதிகரித்துள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

இன்று சிறுவர்களுக்கு மத்தியில் இரத்தப்புற்றுநோய், மூளைப்புற்றுநோய் போன்ற நோய்கள் வெகுவாக அதிகரித்துள்ளதாகவும் வைத்தியர் சுட்டிக்காட்டினார்.

கையடக்கத் தொலைபேசிக்கு அடிமையாகுவதால் ஏற்படும் உடல் சோர்வு புற்றுநோய் உள்ளிட்ட தொற்று நோய்கள் அதிகரிப்பதற்கு ஒரு காரணம் எனவும் வைத்தியர் எச்சரித்துள்ளார்.

நோய்களில் இருந்து விடுபட குழந்தைகளை இனிப்பு பானங்கள் மற்றும் சிற்றுண்டிகளில் இருந்து விலக்கி வைப்பது முக்கியம் என வலியுறுத்தினார்.

குறிப்பாக குழந்தைகளுக்கு இரண்டு வருடங்கள் தாய்ப்பால் கொடுப்பது புற்றுநோயில் இருந்து விடுபட சிறந்த வழி என்று அவர் மேலும் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.

CATEGORIES
TAGS
Share This