அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார் செந்தில் பாலாஜி!

அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார் செந்தில் பாலாஜி!

அமைச்சர் செந்தில் பாலாஜி தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

8 மாதங்களாக இலாகா இல்லாத அமைச்சராக நீட்டித்த நிலையில், செந்தில் பாலாஜி பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

புழல் சிறையில் இருந்து தனது ராஜினாமா கடிதத்தை அனுப்பியதாக தகவல் வெளியாகியுள்ளது. அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளிவரும் எனவும் கூறப்படுகிறது.

கடந்த 2023ம் ஆண்டு 14ம் திகதி சட்டவிரோத பணப் பரிமாற்ற தடை சட்ட வழக்கில் அமைச்சர் செந்தில் பாலாஜி அமலாக்கத்துறையினரால் கைது செய்யப்பட்டார்.

பிறகு, புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள செந்தில் பாலாஜி மீதான விசாரணையும் நடைபெற்று வருகிறது.

CATEGORIES
TAGS
Share This