தமிழர்கள் மீது தொடந்தும் தாக்குதல்கள் தடுத்து நிறுத்த அயல் நாடு வெளிநாடுகள் உதவிசெய்ய வேண்டும்!

தமிழர்கள் மீது தொடந்தும் தாக்குதல்கள் தடுத்து நிறுத்த அயல் நாடு வெளிநாடுகள் உதவிசெய்ய வேண்டும்!

வடக்கு, கிழக்கில் தமிழர்கள் மீதும் இந்து ஆலயங்கள் மீதும் தொடர்ந்தும் தாக்குதல்கள் தடுத்த நிறுத்த அயல்நாடு வெளிநாடுகள் உதவிசெய்ய வேண்டும் என ஒருங்கிணைந்த தமிழர் கட்டமைப்பின் தலைமை ஒருங்கிணைப்பாளர் தவத்திரு. அகத்தியர் அடிகளார் தெரிவித்தார்.

வெடுக்குநாறிமலை ஆதிலிங்கேஸ்வரர் ஆலயத்தில் சிவராத்திரி வழிபாடுகளை முன்னெடுத்தவர்களை அநாகரிக முறையில் தூக்கிவீசி, கைதுசெய்து, வழிபாட்டைக் காட்டுமிராண்டித்தனமாகக் குழப்பிய பொலிஸாரின் படுபாதகச் செயலைக் கண்டித்தும், வழிபாட்டு உரிமையை நிலைநாட்டும் வகையிலும் நல்லூர் ஆதீன முன்றிலில் திங்கட்கிழமை (11) கவனயீர்ப்புப் போராட்டம் இடம்பெற்றது இப் போராட்டத்தின் போதே இதனைத் தெரிவித்தார்

அவர் மேலும் தெரிவிக்கையில்

தமிழர்கள் மீதும் அவர்கள் வழிபாட்டு இடங்கள் மீதும் தொடர்ந்தும் தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டுவருகிறது் நீதிமன்ற கட்டளையை மதிக்காத நாடாகவே எமது நாடு விளங்குகிறது இதனை அருவருக்கத்தக்கதாகவே நாங்கள் உணருகின்றோம் அத்தகைய நீதியைத்தான் நாங்கள் அடுக்கடுக்காக கண்டுகொண்டு இருக்கிறோம் இது ஒரு நாட்டுக்கு ஆரோக்கியமானதல்ல அரசுக்கு ஆரோக்கியமானதல்ல எனவே நாங்கள் எங்கள் உரிமையை நிலை நிறுத்துவதற்காக எத்தகைய முயற்சிகளை நாங்கள் எடுப்போம் இதனை அயல்நாடு, வெளிநாடு பார்த்துக் கொண்டிருக்கிறது. காந்தி தேசம் பார்த்துக்கொண்டிருக்கிறது வெளிநாடுகள் ஒன்றிணைந்து நாம் உரிமையுடன் வாழ வழிசெய்ய வேண்டும் அதுவரை ஜனநாயக முறையில் போராடுவோம் என்றார்.

CATEGORIES
TAGS
Share This