இந்தியாவின் பொருளாதாரம் 3வது இடத்திற்கு முன்னேறும் – பிரதமர் மோடி

இந்தியாவின் பொருளாதாரம் 3வது இடத்திற்கு முன்னேறும் – பிரதமர் மோடி

மக்களவையில் பிரதமர் மோடி உரையாற்றியதாவது:-

இந்தியாவின் பொருளாதார வளர்ச்சியை உலகமே பாராட்டுகிறது. 10 ஆண்டுகால வலிமையான ஆட்சியின் மூலம் வலிமையான பொருளாதாரம் உறுதி செய்யப்பட்டுள்ளது.

நாங்கள் 3வது முறை ஆட்சிக்கு வரும்போது நாடு உலகின் 3வது பெரிய பொருளாதார நாடாக மாறும். உலகின் 3வது பொருளாதார நாடாக இந்தியா மாறும் எனும்போது எதிர்க்கட்சிகள் விமர்சிக்கின்றனர்.

எதிர்க்கட்சிகள் விரைவில் பார்வையாளர் மாடத்தில் அமர்ந்திருப்பார்கள். 10 ஆண்டுகளுக்கு முன்பு 2014ல் இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது.

இந்தியாவின் ஜிடிபி உலக பொருளாதாரத்தில் 11வது இடத்தில் இருந்து 5வது இடத்திற்கு வந்துள்ளது.

அடுத்த 30 ஆண்டுகளில் இருந்தியாவின் பொருளாதாரம் 3வது இடத்திற்கு முன்னேறும். 30 ஆண்டு காத்திருக்க வேண்டிய அவசியமில்லை, அடுத்த முறை ஆட்சிக்கு வரும்போது 3வது இடத்தில் இந்தியா இருக்கும்.

எனது மூன்றாவது முறை ஆட்சி காலத்தில் இந்தியா உலகிலேயே மூன்றாவது மிகப்பெரிய சக்தியாக உருவெடுக்கும்.

பாஜக அரசின் வேகத்தை காங்கிரஸ் கட்சியால் கற்பனை செய்து பார்க்க முடியாது. நகர்புறத்தில் வாழும் ஏழைகளுக்காக பாஜக அரசு 4 கோடி வீடுகளை கட்டிக் கொடுத்துள்ளது.

பாஜக செய்துள்ள சாதனைகளை காங்கிரஸ் செய்ய 100 ஆண்டுகள் ஆகும். நாட்டின் திறமை மீது காங்கிரஸ் எப்போதும் நம்பிக்கை வைத்தது இல்லை.

காங்கிரஸ் கொண்டுள்ள மனப்பான்மையால் நாட்டிற்கு பெரும் தீங்கு ஏற்படும். காங்கிரசுக்கு, கடுமையாக உழைக்கும் மனப்பான்மை இல்லை.

நாங்கள் 70 கோடிக்கும் அதிகமான எரிவாயு இணைப்புகளை கொடுத்துள்ளோம். இதையே காங்கிரஸ் ஆட்சி காலத்தில் செய்வதாக இருந்தால் 70 கோடி இணைப்புகளை வழங்க 60 ஆண்டுகள் ஆகி இருக்கும். நாங்கள் பணியாற்றும் வேகத்திற்கு இணையாக காங்கிரஸ் கட்சியால் பணியாற்றவே முடியாது. காங்கிரஸ் கட்சி ஒரு குறிப்பிட்ட பொருளை மீண்டும் மீண்டும் அறிமுகம் செய்ய நினைத்து தோல்வியடைந்தது.

இந்தியாவை பற்றி நேரு, இந்திரா காந்தி ஆகியோரின் எண்ணங்கள் மேன்மையாக இல்லை. மக்களை பற்றி சரியாக சொல்லாவிட்டாலும், இந்திரா காந்தி காங்கிரசை பற்றி சரியாக சொல்லி உள்ளார். ஒரு குடும்பத்தை தாண்டி காங்கிரஸ் கட்சியால் சிந்திக்கவும் முடியாது, பார்க்கவும் முடியாது.

காங்கிரஸ் கட்சியின் செயல்பாடு தற்போது அவர்களின் கூட்டணியை உடைத்துவிட்டது. எங்களுக்கு தேசத்தின் திறமையின் மீது நம்பிக்கை உள்ளது மக்களின் சக்தியின் மீதும் நம்பிக்கை உள்ளது.

3வது ஆட்சிக் காலத்தில் வளர்ச்சி அடைந்த பாரதத்தை உருவாக்குவோம். பல்வேறு மக்கள் நலத்திட்டங்களை கொண்டுவந்து, நாட்டை வளர்ச்சி பாதையில் வழிநடத்தினோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

CATEGORIES
TAGS
Share This