இந்திய வெளிவிவகார அமைச்சரை சந்தித்தார் அனுர!

இந்திய வெளிவிவகார அமைச்சரை சந்தித்தார் அனுர!

தேசிய மக்கள் சக்தியின் (NPP) தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் அனுரகுமார திஸாநாயக்க, இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ் ஜெய்சங்கரை இந்தியாவின் புதுடில்லியில் சந்தித்துள்ளார்.

நமது இருதரப்பு உறவு மற்றும் அதன் ஆழமான பரஸ்பர நன்மைகள் பற்றிய நல்ல விவாதம் இடம்பெற்றதாவும் மேலும் இலங்கையின் பொருளாதார சவால்கள் மற்றும் முன்னோக்கி செல்லும் பாதை குறித்தும் கலந்துரையாடப்பட்டதாக இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ் ஜெய்சங்கர் தமது உத்தியோகபூர்வ x தளத்தில் பதிவிட்டுள்ளார்.

அண்டை நாடு முதல் மற்றும் SAGAR கொள்கைகளுடன் இந்தியா எப்போதும் இலங்கையின் நம்பகமான நண்பராகவும் நம்பகமான பங்காளியாகவும் இருக்கும் என்றும் இந்திய அமைச்சர் ஜெய்சங்கர் உறுதியளித்தார்.

இந்திய அரசாங்கத்தின் அழைப்பின் பேரில் பாராளுமன்ற உறுப்பினர் அனுரகுமார திஸாநாயக்க இந்தியாவுக்கு விஜயம் மேற்கொண்டுள்ளார்.

CATEGORIES
TAGS
Share This